மேலும் அறிய

கோவையில் ஆகஸ்ட் 15 இல் ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா

வேளாண் தொழில் முனைவோர்களுக்கான 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ஈஷா மண் காப்போம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை தொழிலதிபர்களாக உருவாக்கும் பொருட்டு இந்தப் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. விவசாயம் சார்ந்து வெற்றிகரமாக நடைபெறக் கூடிய தொழில்கள் குறித்த விழிப்புணர்வையும், அது சார்ந்த வழிகாட்டுதல்களையும் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்கும் நோக்கத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா - கனவு மெய்ப்பட வேண்டும்’ எனும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி புதிய வேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவையில் ஆகஸ்ட் 15 இல் ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா

இதில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதனை பிராண்டிங் செய்வது குறித்த யுக்திகள், பொருட்களை பேக்கிங் செய்வதில் உள்ள தொழில்நுட்பங்கள், எவ்வாறு சந்தைப்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், அரியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும் விவசாயம் சார்ந்து தொழில் துவங்க அரசு சார்பில் என்ன மாதிரியான உதவித் திட்டங்கள் இருக்கின்றது என்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.  குறிப்பாக வேளாண் வணிக வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான ஞானசம்பந்தம் பேச உள்ளார்.

சிறுதானியங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் பிவிஆர் பூட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சுபத்ரா, இதுவரை 17,000 தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள S.K. பாபு, ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் விற்பனையில் சாதித்த முருங்கை விவசாயி பொன்னரசி, தனது 50-வது வயதில் தொழில் துவங்கி மூலிகை மதிப்பு கூட்டல் தொழிலில் வென்ற விஜயா மகாதேவன் உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களும், நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனுள்ள தலைப்புகளில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள  இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget