மேலும் அறிய

Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் கடத்தப்பட்ட அப்துலிடம் 500 கிராம் நகையை பறித்துக் கொண்டு பவானி அருகே இறக்கிவிட்டு சென்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அப்துல் ரசாக் என்பவரை ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் கடத்தப்பட்ட அப்துலிடம் 500 கிராம் நகையை பறித்துக் கொண்டு ஈரோடு மாவட்டம், பவானி அருகே இறக்கிவிட்டு சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தி சென்று கொள்ளையடுத்த 4 பேர் கொண்ட கும்பலை கோவை நகர காவல் துறை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் (28), ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்தவர்களான அவரது நண்பர்கள் மகேஸ்வரன் (28), குருதேவ், (27), திருமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வைத்து கோவை மாநகர உதவி ஆணையர் பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “மகேந்திரன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் மகேஸ்வரன் சென்னையில் உள்ள நான்கு சக்கர வாகனப் பட்டறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். திருமூர்த்தி பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார்.

மகேந்திரனின் மூத்த சகோதரர் தேவேந்திரன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதால், 500 கிராம் எடையுள்ள 6 தங்கச் சங்கிலிகளை பயணியிடம் கொடுத்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரசாக் (47) என்பவரிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைக்கச் சொன்னார். தங்கம் கொண்டு வருவது குறித்து மகேந்திரனுக்குத் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அப்துல் ரசாக்கிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு உதவி செய்வதாக உறுதியளித்த நண்பர் மகேஸ்வரனிடம் உதவி கோரினார்.

மகேஸ்வரன் தனது இரு சகோதரர்களையும் கோவை விமான நிலைய பகுதிக்கு அழைத்து வந்தார்.  4 பேர் கொண்ட கும்பல் காரில் விமான நிலையப் பகுதியில் இரண்டு நாட்களாக சுற்றித் திருந்து வந்து உள்ளது. இந்த கும்பல் சென்னையில் உள்ள ஒரு கடையில் போலீஸ் சீருடைகள் மற்றும் பேட்ஜ்களை வாங்கியுள்ளனர். மகேஸ்வரன் ஐபிஎஸ் அதிகாரியின் சீருடையையும், அவரது தம்பி போலீஸ் கான்ஸ்டபிளின் சீருடையையும் அணிந்து இருந்துள்ளனர். அவர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து வாகனத்தை வாடகைக்கு எடுத்து, ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் ஏர்போர்ட் சர்வீஸ் ரோடு அருகே 500 கிராம் தங்கச் சங்கிலிகளுடன் அப்துல் ரசாக்கை கடத்திச் சென்றனர். தங்கச் சங்கிலிகளை ஒப்படைக்கும்படி கூறினர். அப்துல் ரசாக் மறுத்ததால், அவரை கொன்று விடுவோம் என அந்த கும்பல் மிரட்டியது. பின்னர், தங்கச் சங்கிலிகளை ஒப்படைத்த கும்பல் அவரை ஈரோடு மாவட்டம் பவானியில் இறக்கிவிட்டுச் சென்றது.  

இதுதொடர்பாக அவர் பீளமேடு காவல் அலுவலகம் ஆகஸ்ட் 5ம் தேதி புகார் அளித்ததையடுத்து, காவல் துறையினர் அந்த கும்பல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை சேகரித்து பார்த்த போது, அக்கும்பல் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வாகன பதிவு எண்ணை வாடகைக்கு எடுத்த வாகனங்களுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கோவை சர்வதேச விமான நிலையம் அருகே சனிக்கிழமை சுற்றித் திரிந்த கும்பல், நான்கு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். 500 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டது குறித்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Embed widget