மேலும் அறிய

ரயில் தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர் - ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்..!

’’ரயிலை நிறுத்திவிட்டு ஊழியர்கள் அந்த நபரை தேடிய நிலையில் எவ்வித காயமும் இன்றி அந்த போதை ஆசாமி தப்பியது தெரியவந்தது’’

கோவை அருகே ரயில்வே தண்டவாளத்தில் மது `போதையில் தூங்கிய நபர் மீது ரயில் கடந்துச் சென்ற நிலையில், அந்த நபர் எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவை - மேட்டுப்பாளையம் இடையே தினமும் பயணிகள் ரயில் சேவை இயங்கி வருகிறது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர்  நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி செல்வோரும், அங்கிருந்து கோவை வரும் பயணிகளுக்கும் இந்த இரயில் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கோவை இரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல கோவை – மேட்டுப்பாளையம் பயணிகள் இரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் பகுதிக்கும், பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை தூரத்தில் இருந்து கவனித்த இரயில் இன்ஜின் டிரைவர், ரயிலில் இருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பியுள்ளார். அந்த சத்தங்களை பொருட்படுத்தாத அந்த நபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதையடுத்து இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.


ரயில் தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர் - ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்..!

இதையடுத்து இரயில் சில அடி தூரம் தாண்டி சென்று நின்ற நிலையில், இரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இறங்கி இரயில்வே தண்டவாளத்தில் இருந்த நபரை தேடியுள்ளனர். அப்போது அந்த நபருக்கு எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை தட்டி எழுப்பி தண்டவாளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர். பின்னர் போதையில் இருந்த நபர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். ரயில்வே தண்டவாளத்தில் ரயில் பெட்டிகளுக்கு அடியே படுத்திருந்த போதை நபரை பயணிகள் தட்டி எழுப்பி மீட்பதையும், போதையில் அந்த நபர் சரிந்து விழுவதையும் அங்கிருந்த சில பயணிகள், செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

கோவை - மேட்டுப்பாளையம் :

இரயில் தண்டவாளத்தில் மது போதையில் படுத்து உறங்கிய மதுப்பிரியர்

இரயிலை நிறுத்தி மதுப்பிரியரை தட்டி எழுப்பிய இரயில்வே ஊழியர்கள் pic.twitter.com/IVGUtZrpbi

— DON Updates (@DonUpdates_in) September 28, 2021

">

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகளுக்கு ”அப்படி என்ன சரக்கா இருக்கும்?”, “அதிர்ஷ்டம்னா இது தான்?” என்பது போன்ற பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது ரயில் பெட்டிகள் தாண்டி நின்றும், ஒரு அசம்பாவிதமும் இன்றி உயிர் தப்பிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget