மேலும் அறிய

இறுக்கமான சட்டை அணிந்த மாணவர் மீது தாக்குதல் - ஆசிரியர் செயலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

”மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இதை அனுமதிக்கக்கூடாது. தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கலாதரன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் மிதுன். 16 வயதான இவர் அதே பகுதியில் உள்ள சி.எம்.எஸ் என்ற தனியார் பள்ளியில் பயாலஜி பிரிவில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கால் பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் நீட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த மாணவர் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்கு பள்ளியில் வழங்கப்பட்ட சீருடை சட்டை இறுக்கமின்றி தளர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் சட்டையை இறுக்கமாக்கி அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர், சட்டை ஏன் இறுக்கமாக உள்ளது என மாணவரை கேட்டுள்ளார். அதற்கு மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இறுக்கமான சட்டை அணிந்த மாணவர் மீது தாக்குதல் - ஆசிரியர் செயலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

இது குறித்து மாணவர் கூறுகையில், “நேற்று முன் தினம் பள்ளியில் யூனிபார்ம் கொடுத்தார்கள். அந்த சட்டை மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் எனது அம்மாவிடம் கொடுத்து டைட் செய்ய சொன்னேன். அவர் கொஞ்சம் அதிகம் டைட்டாக செய்து விட்டார். அது குறித்து கேட்டதற்கு பள்ளிக்கு செல்ல நேரமாகி விட்டதால் மாலை பிரித்து சரி செய்து தருவதாக கூறினார். அதனால் நேற்று அந்த சட்டையை அணிந்து சென்றேன்.

நேற்று இரண்டாவது பிரியட் வந்த ஆசிரியர் சட்டை ஏன் இவ்வளவு டைட்டாக போட்டுகிறாய் எனக் கேட்டு சட்டையை பிடித்து இழுத்து இழுத்து அடித்தார். 20 நிமிடம் குனிய வைத்து நிறுத்தாமல் அடித்தார். பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து கேட்கும் வரை அடித்தார். அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுத்து பார்க்க வந்துள்ளேன். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற மாணவரின் தந்தை கலாதரன், தனது மகனை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தது தொடர்பாக கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1. கோவை கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது!

— Dr S RAMADOSS (@drramadoss) December 11, 2021

">

இந்நிலையில் மாணவரை தாக்கிய ஆசிரியரின் செயலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில், “கோவை கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11 ம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது!

ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும். தவறு செய்தால் தண்டித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இதை அனுமதிக்கக்கூடாது!

காயமடைந்த மாணவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கனிவுடன் நடந்து கொள்வது குறித்து உரிய பயிற்சிகளும், கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்!” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Embed widget