மேலும் அறிய

இதில் எங்களுக்கு பெருமைதான்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் - சீமான்

கோவையில் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்க்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே நாம் தமிழர் நடத்தும் இடத்தில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். இதனை திமுகவினர் ஏற்க மறுத்ததால், காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது திமுகவினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய திமுகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் எங்களுக்கு பெருமைதான்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் - சீமான்

இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும், தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுவிக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம். 10 ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருக்கும்  கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் ராஜிவ் கொலை, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர். இஸ்லாமியர் என மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும்.

இதில் எங்களுக்கு பெருமைதான்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் - சீமான்

அண்ணா பிறந்தநாளில் 700 சிறைகைதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. மதவாத்திற்கு எதிரானவர் என பேசி, இடதுசாரி, முற்போற்கு என பேசி இஸ்லாமியர்களை  விடுவிக்காமல் இருக்கின்றது. இது குறித்து குழு அமைக்க போவதாக தமிழக அரசு சொல்கின்றது. மக்களின் உணர்வு விடுதலை தான். இதில் குழு என்பது தேவையற்றது. மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்கவேண்டும். எதிர்கட்சியாக இருந்த போது 7 தமிழர் விடுதலை பேசுகின்றனர். இப்போது திமுகவினர் பேச மாட்டார்கள். இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டதால் திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தினர். மனிதநேய அடிப்படையில், கருணை  அடிப்படையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இதில் எங்களுக்கு பெருமைதான்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் - சீமான்

திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது. அவர்கள் தரக்குறைவாக தான் பேசுவாங்க. சின்னம்மாவை அம்மாவாக்க போகின்றேன் என திமுகவினர் பேசுகின்றனர். அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பாஜகவே இதைத்தான் செய்கின்றது. அதையே திமுகவும் செய்கின்றது. அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல. அரசு சரியாக இருந்தால் பேசப்போவதில்லை" என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget