மேலும் அறிய

கோவையில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழப்பு..!

கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அவ்வப்போது கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடிப்பதும், மீண்டும் கோவை முதலிடம் பிடிப்பதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருப்பதால், கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 4 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 627 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2392 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 103617 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 102058 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 681 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 73 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 79 பேர் குணமடைந்துள்ள நிலையில், 808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 94669 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92889 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 972 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 26 பேர் குணமடைந்துள்ள நிலையில், 324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 33382 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32850 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 208 ஆக உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget