கோவை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகப் போகிறது..விரைவில் திறப்பு விழா..மகிழ்ச்சியில் மக்கள்
Coimbatore Western Ring Road: கோவை மக்களின் நீண்ட ஆண்டு கனவு சாலையான கோவை மேற்கு புறநகர் ரிங் ரோடு திட்டங்கள் வேகம் எடுத்துள்ளது.

கோவை மேற்கில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சாலை மீதம் உள்ள பணிகள் வேகமாக நடந்து வருகிறது. குறிப்பாக கோவை மேற்கு ரிங் ரோடு சேலம்-கொச்சி சாலையில் தொடங்கி, நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்படுகிறது. இந்தப் சுற்றுச் சாலையின் மொத்த நீளம் 32.43 கிலோமீட்டர் ஆகும். ரிங் ரோட்டிற்கான நான்கு வழிச்சாலை மிக தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. இதனால் கோவை மேற்கு ரிங் ரோடு பணிகள் விரைவில் முழுமையாக நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மக்களின் நீண்ட ஆண்டு கனவு சாலையான கோவை மேற்கு புறநகர் ரிங் ரோடு திட்டங்கள் வேகம் எடுத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட மேற்கு சுற்றுச்சாலை முதல் கட்டத்தில் 60% பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை முடித்துள்ளது.
கோவை புறவழிச்சாலை:
கோவை புறவழி சாலை அமைப்பதற்கு முதற்கட்டமாக 200 கோடியில் நடைபாதை உடன் கூடிய சாலை அமைக்கப்படும். 2023ல் தொடங்கிய இந்தப் பணி மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தாமதமாக நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 70% சதவீதம் நிறைவடைந்துள்ளது. கோவை புறவழி சாலை மாதம்பட்டியில் இருந்து கணுவாய் வரை சுமார் 10 கி.மீ அரசு நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. புறநகர் சாலை அமைக்கும் பணி ஆனது நீண்ட நாட்களாக நடைபெற்று வந்து தற்போது முடிய உள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெற்ற சாலை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி வழியாக சுமார் 11.80 கி.மீ சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது.
கோவை சுற்றுச்சாலை:
பேரூர், மேற்கு சித்திரை சாவடி, கல்லிக்கநாயக்கன் பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் வழியாக இந்த சாலை செல்லும். 3ம் கட்டத்தின் நீளம் 8.52 கி.மீ., பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம் வழியாக இரண்டாம் கட்டம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் கூடலூர் இடையே அமைக்கப்பட உள்ள 4 வழிச்சாலையில் இருபுறமும் 9 மீட்டர் வாகனம் செல்லும் வழி மற்றும் 4 மீட்டர் அகலத்தில் செடிகள் கொண்ட மீடியன் அமைக்கப்படும். இதற்காக மதுக்கரை அருகே தமிழக வனத்துறையின் நிலத்தில் பல மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூத்த அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், கட்டம் 1 இல் சுமார் 60 சதவீதம் முடித்துள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்தது. இரண்டாம் கட்டமாக, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும். சமீபத்தில் வாகன ஓட்டி ஒருவர் குழியில் விழுந்து இறந்ததை அடுத்து, நாங்கள் தடுப்புகளை அமைத்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர். இன்னொரு சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எல்.அண்ட்.டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. குறுகலான எல்.அண்ட்.டி பைபாஸ் சாலையை நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை சுமார் 27.2 கி.மீ ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை விரிவுபடுத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன என தெரிவித்தனர்.





















