10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கோவையின் நிலை என்ன? முழு விவரம் இதோ...
பத்தாம் பகுப்பு தேர்வு முடிவுகளில் 92.38 சதவீத தேர்ச்சியுடன், கோவை மாவட்டம் 10 வது இடத்தை பிடித்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் 96.91 சதவீதத்துடன், கோவை மாவட்டம் 3 வது இடத்தை பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், பனிரெண்டாம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் பகுப்பு தேர்வு முடிவுகளில் 92.38 சதவீத தேர்ச்சியுடன், கோவை மாவட்டம் 10 வது இடத்தை பிடித்துள்ளது. தேர்வு எழுதிய 39 ஆயிரத்து 631 பேரில், 36 ஆயிரத்து 611 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 827 மாணவர்களில், 17 ஆயிரத்து 584 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 804 மாணவிகளில், 19 ஆயிரத்து 27 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.69 ஆக உள்ள நிலையில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.08 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக இந்தாண்டும் மாணவர்களை காட்டிலும், மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.46 ஆக உள்ளது. 155 பள்ளிகளில் உள்ள 11 ஆயிரத்து 404 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 9 ஆயிரத்து 632 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 77.53 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.35 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தேர்வுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். பார்வை மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 95 ஆகவும், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.30 ஆகவும், உடல் ரீதியான மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 92 ஆகவும், மற்ற வகை மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 97.30 சதவீதமாகவும் உள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் 96.91 சதவீதத்துடன், கோவை மாவட்டம் 3 வது இடத்தை பிடித்துள்ளது. தேர்வு எழுதிய 33 ஆயிரத்து 737 பேரில், 32 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 15 ஆயிரத்து 385 மாணவர்களில், 14 ஆயிரத்து 705 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 18 ஆயிரத்து 352 மாணவிகளில், 17 ஆயிரத்து 990 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.58 ஆக உள்ள நிலையில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.03 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக இந்தாண்டும் மாணவர்களை காட்டிலும், மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.46 ஆக உள்ளது. 90 பள்ளிகளில் உள்ள 8 ஆயிரத்து 199 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 7 ஆயிரத்து 581 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 89.45 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.66 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தேர்வுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். பார்வை மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 100 ஆகவும், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 81.48 ஆகவும், உடல் ரீதியான மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 100 ஆகவும், மற்ற வகை மாற்றுத்திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம் 98.78 சதவீதமாகவும் உள்ளது.