Coimbatore Power Shutdown: கோவை மக்களே அலர்ட்... நாளை(18.07.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம்
Coimabatore Power Shutdown: கோவையில் நாளை (18.07.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் நகரின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது

Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை (18.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
பாப்பநாயக்கன் பாளையம்:
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்
மத்தம்பாளையம்
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
செல்லப்பம் பாளையம்
மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராயணாபுரம்
முன்னெச்சரிக்கை:
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.























