மேலும் அறிய

AIADMK Alliance Seat Sharing: பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான லிஸ்ட்

AIADMK Alliance Seat Sharing: பாஜகவுடன் நாளை தொகுதி உடன்பாடு ஏற்படவுள்ளது. இதே போல அடுத்த 4 நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் முடிவு செய்யப்படும் என அமித்ஷாவை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீடு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 33 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து இறுதிக்கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யு.எம்.எல், மமக உட்பட 6 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறியானது நீடித்து வருகிறது. 

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

அதே நேரம் திமுகவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மத்தியிலேயே பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்த அதிமுக, அடுத்தாக பாமகவையும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் இணைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்டசி, புரட்சி பாரதம் என கூடுதல் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து வருகிறது. அந்த வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திறைமறைவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இபிஎஸ் அமித்ஷா சந்திப்பு

இதன் காரணமாக தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கும் வகையில் கூட்டணி கட்சிகள் மற்றும் அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலோடு நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். இரவு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. மேலும் சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பா.? அல்லது தாமரை இலை சின்னத்தை களம் இறக்குவதா.? ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 17 தொகுதிகளும், அமமுகவிற்கு 9 தொகுதிகளும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறிய கட்சிகளுக்கு அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஒதுக்கப்படவுள்ள இடங்களில் அந்த கட்சிகளுக்கு என தனியாக தொகுதி ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் களம் தொடர்பாக அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நாளைய தினம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வரவுள்ளார். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அடுத்த 4 நாட்களில் தொகுதி பங்கீடு முடிக்கப்படும் எனவும் இபிஎஸ் தெரிவித்தார். தேர்தல் அறிக்கை ஒரு வார காலத்தில் வெளியிடப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதே நேரம் தவெகவுடன் எந்த வித கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லையெனவும் உறுதிபட கூறினார்.  

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget