மேலும் அறிய

Carens Clavis EV: நாட்டின் சீப்பான 7 சீட்டர் மின்சார கார், கியா தந்த அப்க்ரேட் - புது ட்ரிம்கள், சீட்டிங், விலை அப்டேட்

Kia Carens Clavis EV: நாட்டின் மலிவு விலை மின்சார 7 சீட்டர் மாடலான காரென்ஸ் க்ளாவிஸ் காருக்கு புது ட்ரிம்களை அறிமுகப்படுத்தி, அதன் போர்ட்ஃபோலியோவை கியா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

Kia Carens Clavis EV: காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார காரில் புதியதாக 6 இருக்கைகள் கொண்ட ஆப்சனையும் கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காரென்ஸ் க்ளாவிஸ் EV-க்கு புதிய அப்க்ரேட்கள்

கியா நிறுவனம் தனது முழுமையான மின்சார எம்பிவியான 7 சீட்டர் காரென்ஸ் க்ளாவிஸ் மாடலுக்கான, கவர்ச்சியை அதிகரிக்கும் விதமாக புதிய ட்ரிம்கள், இருக்கை லே-அவுட்கள் மற்றும் அம்ச மேம்படுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரானது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை மேலும் வலுவாக்கி, விரிவுபடுத்தும் நோக்கில், கேப்டன் சீட் வசதியுடன் 6 இருக்கை லே-அவுட் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கியா அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம், காரென்ஸ் க்ளாவிஸ் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும், எம்பிவி பிரிவில் வலுவான சந்தைப் பகிர்வை ஈட்டும் என்றும் நம்பப்படுகிறது.

காரென்ஸ் க்ளாவிஸ் EV - 6 சீட் லே-அவுட்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய 6 இருக்கை லே-அவுட்டானது பல்வேறு வேரியண்ட்களிலும் கிடைக்கப்பெறுகிறது. அதில்,  HTX (E), HTX, HTX+, GTX, GTX+ மற்றும் X-Line ஆகியவை அடங்கும். அதேநேரம், 7 சீட்டர் ஆப்ஷனானது பயன்பாட்டிற்கு ஏற்ப தன்னை தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்பினை பயனர்களுக்கு வழங்குகிறது. பவர்ட்ரெயின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இன்றி, காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனானது அதே இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் அப்படியே தொடர்கிறது.

இதையும் படியுங்கள்: kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்

முழுமையாக சார்ஜ் செய்தால் சிறிய 42KWh பேட்டரி பேக் ஆனது 404 கிலோ மீட்டர் தூரமும், பெரிய 51.4KWh பேட்டரி பேக் ஆனது 490 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்கும் என கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனானது 10-லிருந்து 80 சதவிகிதம் என்ற நிலையை, வெறும் 39 நிமிடங்களில் எட்டும் திறன் கொண்டுள்ளது.


Carens Clavis EV: நாட்டின் சீப்பான 7 சீட்டர் மின்சார கார், கியா தந்த அப்க்ரேட் - புது ட்ரிம்கள், சீட்டிங், விலை அப்டேட்

காரென்ஸ் க்ளாவிஸ் EV - புதிய வேரியண்ட்கள் அறிமுகம்

காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்டில், பெரிய பேட்டரி பேக்கில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள GT Line, X-Line வேரியண்ட்கள் மிகுந்த கவனத்தை ஈர்க்கின்றன.  GT Line வேரியண்டானது GTX மற்றும் GTX+ ட்ரிம்களை உள்ளடக்கியுள்ளது. இவை தனித்துவமான அலாய் வீல்கள், லைம் ப்ரேக் கேலிபர்ஸ் மற்றும் மெடல் பெடல்ஸ் மூலம் கூடுதலாக ஸ்போர்ட்டி தாக்கத்தை கொண்டுள்ளன. மறுபுறம், X-Line வேரியண்டானது கூடுதலான ரக்கட் தோற்றத்திற்கு வழிவகுக்கும் விதமாக, அடர்த்தியான வெளிப்புற எலிமெண்ட்களுடன் புதிய டார்க் கன் மெடல் ஷேட் வழங்கப்பட்டுள்ளது. இது எஸ்யுவி மாதிரியான தோற்றத்தை மேம்படுத்துகிறது.  

காரென்ஸ் க்ளாவிஸ் EV - அம்சங்களில் வந்த அப்டேட்கள்

நடப்பு 2026 உற்பத்தி ஆண்டில் தயாரிக்கப்படும் காரென்ஸ் க்ளாவிஸில் முக்கியமான சில அம்சங்களையும் கியா மேம்படுத்தியுள்ளது. அதன்படி, டாப் ட்ரிம்களில் டிஜிட்டல் கீ ஃபங்க்சனாலிட்டி, பேட்டரி ஹீட்டர் டெக் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 26.62 இன்ச் ஒருங்கிணைந்த அளவிலான இரட்டை பனோரமிக் டிஸ்பிளே செட்-அப், 85-க்கும் அதிகமான கனெக்டட் அம்சங்கள், டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றின் மூலம் கேபின் தொடர்ந்து பயனர்களின் கவனத்தை ஈர்க்கிறது.


Carens Clavis EV: நாட்டின் சீப்பான 7 சீட்டர் மின்சார கார், கியா தந்த அப்க்ரேட் - புது ட்ரிம்கள், சீட்டிங், விலை அப்டேட்

கூடுதலாக MyKia செயலி வழியாக 15,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களுக்கான அணுகல் , வழித் திட்டமிடல் மற்றும் கட்டண ஒருங்கிணைப்பு, அத்துடன் DC ஃபாஸ்ட் சார்ஜர்களுடன் கூடிய 100-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் ஆகியவற்றின் அணுகலை கியா நிறுவனம் எளிமைப்படுத்தியுள்ளது.

காரென்ஸ் க்ளாவிஸ் EV - விலை வரம்பு

கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனின் விலையானது, பேட்டரி அளவு, அம்சங்கள் மற்றும் சீட்டிங் கான்ஃபிகரேஷனை பொறுத்து மாறுபடுகிறது. அதன்படி, இந்த காரின் விலை வரம்பானது 17.99 லட்சத்தில் தொடங்கி ரூ.24.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.


Carens Clavis EV: நாட்டின் சீப்பான 7 சீட்டர் மின்சார கார், கியா தந்த அப்க்ரேட் - புது ட்ரிம்கள், சீட்டிங், விலை அப்டேட்

பேட்டரி பேக்

இருக்கை

ட்ரிம்

விலை (எக்ஸ் - ஷோரூம்)

42 kWh

7 சீட்டர்

HTK+

ரூ. 17.99 லட்சம்

42 kWh

7 சீட்டர்

HTX E

ரூ. 19.99 லட்சம்

42 kWh

7 சீட்டர்

HTX

ரூ. 20.49 லட்சம்

42 kWh

6 சீட்டர்

HTX E

ரூ. 19.99 லட்சம்

42 kWh

6 சீட்டர்

HTX

ரூ. 20.49 லட்சம்

51.4 kWh

7 சீட்டர்

HTX E ER

ரூ. 21.99 லட்சம்

51.4 kWh

7 சீட்டர்

HTX ER

ரூ. 22.49 லட்சம்

51.4 kWh

7 சீட்டர்

GTX

ரூ. 22.99 லட்சம்

51.4 kWh

7 சீட்டர்

HTX+ ER

ரூ. 24.49 லட்சம்

51.4 kWh

7 சீட்டர்

GTX+

ரூ. 24.99 லட்சம்

51.4 kWh

7 சீட்டர்

X-லைன்

ரூ. 24.99 லட்சம்

51.4 kWh

6 சீட்டர்

HTX E ER

ரூ. 21.99 லட்சம்

51.4 kWh

6 சீட்டர்

HTX ER

ரூ. 22.49 லட்சம்

51.4 kWh

6 சீட்டர்

GTX

ரூ. 22.99 லட்சம்

51.4 kWh

6 சீட்டர்

HTX+ ER

ரூ. 24.49 லட்சம்

51.4 kWh

6 சீட்டர்

GTX+

ரூ. 24.99 லட்சம்

51.4 kWh

6 சீட்டர்

X-லைன்

ரூ. 24.99 லட்சம்

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget