மேலும் அறிய

DMK alliance seat allocation : முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.? லாஸ்ட் சான்ஸ் கொடுத்த ஸ்டாலின்

DMK alliance seat allocation : தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

தமிழக சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதிகட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதியும், மதிமுகவிற்கு 4 தொகுதியும், கொ.ம.தே.க, ஐ.யு.எம்.எல், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறியானது நீடித்து வருகிறது. 

கூடுதல் தொகுதி- கூட்டணி கட்சிகள் பிடிவாதம்

அதிலும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2முதல் 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்க  இன்று அவரச செயற்குழு கூட்டத்தை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் எடுக்கப்படவுள்ள முடிவை பொறுத்து கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

சிபிஎம் நிலை என்ன.?

இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கு பதிலாக 5 தொகுதியை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்ய்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதியை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என விடாப்பிடியாக உள்ளது. இதனால் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடித்து வருகிறது. வருகிற 23ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 5 தொகுதிய ஏற்றுக்கொள்வதா.? அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறுவதா.? என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவுள்ளது.

இரட்டை இலக்கத்தில் தொகுதி- விசிக

இதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி  தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்குமாறு பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுகவோ கடந்தமுறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பு தற்போது வரை அழைக்கவில்லை. அதே நேரம் முதலமைச்சரும், திமுக தலைவருமான  ஸ்டாலினை 2 முறை வீட்டில் சென்று திருமாவளவன் சந்தித்தார். அப்போதும் கூடுதல் தொகுதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையானது நீடித்து வருகிறது. 

திங்கட்கிழமைக்குள் இறுதி முடிவு

கடைசியாக திமுக தரப்பில் 7 தொகுதிகள் வரை தருவதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல புதுச்சேரியிலும் 2 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் நிலையில் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடித்து வருகிறது. எனவே வருகிற திங்கட்கிழமைக்குள் தொகுதி ஒப்பந்தத்தை முடிக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே அடுத்த 3 நாட்களுக்குள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவாலய வட்டார தகவலாக உள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Embed widget