மேலும் அறிய

Kovai Bribery Case: பைல் கிளியர்க்கு பேரம் - கொடிசியாவில் கையும் களவுமாக சிக்கிய கணவன் – மனைவி

கோவையில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு: வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் கணவர் கைது.

கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வரும் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், கணவன்–மனைவி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

பைல் கிளியர் செய்ய ரூ.60 ஆயிரம் பேரம்

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர், தனது நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய Input Tax தொகையை திரும்பப் பெற வணிகவரித்துறையில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த கோப்பை முடித்து வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அபினேஷ் மறுத்த நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.60 ஆயிரம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லஞ்சம் வழங்க விரும்பாத அபினேஷ், இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனப் பொடி தடவிய ரூ.60 ஆயிரம் பணத்துடன் அபினேஷ் சென்றுள்ளார்.

அப்போது உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரிடம் பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கொடிசியா மைதானம் அருகே தனசேகரன் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்ற அபினேஷ், அவரது காரில் ஏறி பணத்தை வழங்கியுள்ளார்.

சிக்கிய வணிகவரித்துறை அதிகாரி

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தனசேகரனை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார், உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் தனசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget