மேலும் அறிய

வயிற்று வலி ஏற்பட்டு 6 வயது சிறுமி உயிரிழப்பு; சத்து மாத்திரை காரணமா? - போலீஸ் விசாரணை

வயிற்று வலி ஏற்பட்டு 6 வயது பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த தம்பதியினரின் ஆறு வயது மகள், அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி கடந்த 5 ஆம்தேதி இரவு வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். முதலுதவி சிகிச்சையாக ஓம வாட்டர் கொடுத்த பெற்றோர், பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடல்நிலை மோசமான சூழலில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ள பெற்றோர், அதே சமயம் மருத்துவ ரீதியிலான காரணங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தங்கள் மகள் பள்ளியில் கொடுக்கும் FERROUS SULPHATE & FOLIC ACID மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்ற தகவலையும் தெரிவித்து இருக்கின்றனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் மற்றும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் வசிக்கும் ராஜாமணி என்பவருடைய 6 வயது மகள், மாநகராட்சி பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிறகு இரவு சுமார் 10 மணியளவில் கோவை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 7.3.2024 அன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்து மாத்திரையை அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களாகிய தங்களிடம் வழங்காமல், நேரடியாக தங்களது மகளுக்கு வழங்கியதால், அந்த சத்து மாத்திரையை சாக்லேட் மிட்டாய் போல் அதிகமாக சாப்பிட்ட நிலையில், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு நாட்களில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அம்மாணவியின் தாயார் பேட்டியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  சிறுமியின் மரணம் குறித்து மருத்துவ ரீதியாக காரணம் அறிய ராஜாமணி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை பெற்றோர்களிடம் வழங்கி, பெற்றோர்களது கண்காணிப்பில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் இந்த விடியா திமுக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தால் இந்த அகால மரணம் நிகழ்ந்திருக்காது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க இந்த விடியா திமுக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரையை வழங்கி, மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், குழந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் பெற்றோருக்கு அதிகபட்ச இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget