மேலும் அறிய

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ; அழுத ஆணையர்

கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ மிரட்டியதால் கமிஷனர் அமுதா பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள் வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தனது ஆதரவாளர்களுடன் வந்த மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் நகராட்சி ஆணையாளர் அமுதாவின் அறைக்குச் சென்று அவரிடம் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.அப்போது, அவர் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே கமிஷனர் எம்எல்ஏ மிரட்டியதால் பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவினை கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது,எம்எல்ஏ மிரட்டியதால் இருக்கையில் இருந்து எழுந்து அழுது கொண்டிருந்த கமிஷனரை சமாதானப்படுத்தி நகராட்சி தலைவரும், துணைத் தலைவரும் மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் கமிஷனர் அங்கிருந்து வேறு ஒரு அறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் கழித்தே மீண்டும் வந்தார்.

அப்போது, எம்எல்ஏ ஏகே செல்வராஜ், ”நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?” என ஒருமையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் பேசியுள்ளார். இதனைக்கண்ட திமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினரை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, திமுகவினர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் எப்படி நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் கமிஷனரை ஒருமையில் பேசலாம்? கமிஷனரை எவ்வாறு மிரட்டலாம்? என கேள்வி கேட்க அப்போதும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ; அழுத ஆணையர்

வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.மேலும், அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட தகவல் அறிந்து வந்த இரு தரப்பினரும் நகராட்சி அலுவலக வளாகத்தில் குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ். கமிஷனர் அமுதா, நகராட்சி பொறியாளர் சுகந்தி உள்ளிட்டோரிடம் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதனிடையே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் பணிசெய்ய விடாமல், ரகளை செய்த  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் கூறுகையில், ”நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சித்திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுகவைச்சேர்ந்த 9 கவுன்சிலர்களின் வார்டுகளில் தான் அதிகளவிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. நானும், துணைத்தலைவர் அருள்வடிவும் சேர்ந்து வரும் குடியரசு தின விழா நடத்துவது குறித்து பேசுவதற்காக கமிஷனர் அறைக்கு சென்றபோது மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தான் அறைக்குள் இருக்கும்போது எப்படி வரலாம்? என ஒருமையில் பேசியது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget