முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு - அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கைது
அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சுப்பிரமணியம் என்பவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் நேற்று அவர் பணி புரியும் அலுவலகத்திற்கு சென்ற காவல் துறையினர் சுப்பிரமணியத்தை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#அஇஅதிமுக கோவை புறநகர் (வடக்கு) மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. அக்ரி சுப்பிரமணி அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசின் அவலங்களை (1/2)
">
இந்நிலையில், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிரைப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்