மேலும் அறிய

Kushboo: 'அடுத்த சூப்பர் ஸ்டார் யாருங்குறது இப்போ ரொம்ப முக்கியமா..?' கடுப்பாகிய குஷ்பு..!

திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிலளித்தார்.

ஆடை அணிவகுப்பில் குஷ்பு:

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில்  வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும்  கேட்வாக் நடந்து மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மணிப்பூர் பற்றி கேட்காதீர்கள்:

நிகழ்ச்சிக்கு பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆகஸ்ட் 7 கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். நான் கோவையின் மருமகள் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் தொடர்பான கேள்விகளுக்கு, அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. இப்போது அவரை அமெரிக்கா கூப்பிட்டு கௌரவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனே தேடி வந்து வணக்கம் சொல்லும் நிலை இருக்கிறது. பிரதமர் மோடி உலகத்திலயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார். அவரது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Kushboo: 'அடுத்த சூப்பர் ஸ்டார் யாருங்குறது இப்போ ரொம்ப முக்கியமா..?' கடுப்பாகிய குஷ்பு..!

சூப்பர்ஸ்டார் என்பது ரொம்ப முக்கியமா?

திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு, “சூப்பர் ஸ்டார் யார் என்பது இப்பொழுது முக்கியமான விசயமா? எல்லாவற்றிக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7 ம் தேதி  தேதி அவருடைய நினைவு நாள். காலையிலேயே அவரது வணக்கம் சொல்லி என்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கின்றேன். கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள். அவரைப் பற்றி நன்றாக தெரியும். வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம்.

பேசன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள். இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்படி ஒரு சட்ட விதி இருக்கிறதா? சின்ன சிரிப்பே இல்லாமல் பொதுவாக எல்லா பேசன் ஷோக்களிலும் பார்க்க முடிகின்றது. கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறி பொருட்கள் பயன்படுத்துகின்றோம்.

மறக்க வேண்டாம்:

கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே வேளையில் நமது கலாச்சாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன். பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கான  நல வாரியம் உருவாக வானதி இருக்கிறார். நான் இருக்கிறேன் எல்லாருமே சேர்ந்து தான் செய்ய முடியும் கண்டிப்பாக செய்வோம்.

ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது. நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.  இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget