மேலும் அறிய

Abp Nadu Impact: கோவையில் சேறும் சகதியுமாக இருந்த சாலைகள் சீரமைப்பு; விரைவாக தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

ஏபிபி நாடுவில் செய்தி வெளியான நிலையில், வெள்ளலூர் பகுதியில் சேறும், சகதியுமாக இருந்த சாலைகளில் மண் கொட்டப்பட்டு சீரமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பல்வேறு சாலைகளில் எரிவாயு இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக சாலைகளை தோண்டி இந்தப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழைக்காலத்திலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக இருக்கிறது. இதனால் அந்த சாலைகளில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அந்த சாலையில் கடும் சிரமத்திற்கு இடையே பயணித்து வருகின்றனர். சேறு அதிகளவில் இருப்பதால் நடப்பவர்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை கோடைக்காலத்திலேயே முடித்து இருக்க வேண்டும். தற்போது மழைக்காலத்தில் பணிகள் நடப்பதால், சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலைகளில் பயணிப்பவர்களின் உடைகளும், வாகனங்களும் சேறும், மண்ணும் அப்பி அழுக்கு அடைக்கின்றன. இந்த சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தர வேண்டும்எனத் தெரிவித்தனர்.

தற்காலிக தீர்வு

இதேபோல குனியமுத்தூர் பகுதியில் குடிநீர் இணைப்பு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலை பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் பிரதான சாலையாக இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லும். இந்த நிலையில் சாலை தோண்டப்பட்டு இருப்பதாலும், மழைக்காலம் என்பதாலும், சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்பவர்கள் கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஏபிபி நாடுவில் செய்தி வெளியான நிலையில், வெள்ளலூர் பகுதியில் சேறும், சகதியுமாக இருந்த சாலைகளில் மண் கொட்டப்பட்டு சீரமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதேசமயம் பணிகளை விரைவாக முடித்து, தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

https://tamil.abplive.com/news/politics/evks-elangovan-exclusive-interview-with-abp-said-karthi-chidambaram-is-selfish-betrays-related-to-dmk-congress-alliance-194162

ALSO READ | EVKS Elangovan Exclusive: கார்த்தி சிதம்பரம் சுயநலவாதி; துரோகம் செய்கிறார்- ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget