மேலும் அறிய

கோவை அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு ; 3 வயது குழந்தை படுகாயம்

குமார் மகனை தூக்கிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்த ஒற்றை ஆண் காட்டு யானை குமாரை பின்புறமாக வந்து தாக்கியது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குமார். 32 வயதான இவர் தனது மனைவி கல்பனா (27) மற்றும் 3 வயது மகனுடன் மருதமலை ஜ.ஓ.பி காலனி கணபதி நகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வந்திருந்தார். இந்நிலையில்  இன்று மாலை 5 மணியளவில் மருதமலை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க மனைவி மற்றும் மகனுடன் சென்றார். விறகு சேகரித்து விட்டு மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கல்பனா விறகுடன் முன்னால் சென்று கொண்டிருந்தார். குமார் மகனை தூக்கிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்த ஒற்றை ஆண் காட்டு யானை குமாரை பின்புறமாக வந்து தாக்கியது. 

யானை தாக்கியதில் சிறுவன் தூக்கி எறியப்பட்ட நிலையில், குமாரை யானை மிதித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. கண்முன்னால் கணவனை யானை மிதித்துக் கொன்றதை கண்டு அலறிய கல்பனா, காயமடைந்து கீழே கிடந்த மகனை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி, குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம்  குறித்து கோவை  வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ”மருதமலை வனப்பகுதியில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தால் அவர்களாகவே விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவார்கள். பிறகு சேகரிக்க வனப்பகுதி ஒட்டி உள்ள இடங்களுக்கு மாலை நேரங்களில் செல்லக்கூடாது. தடாகம், மருதமலை, கெம்பனூர், வனப்பகுதிக்குள் யானைகள் மாறி மாறி இடம் பெயர்ந்து வருவதால், காலை மாலை இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Join Us on Telegram: https://t.me/abpnaduofficial

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget