மேலும் அறிய

Watch Video: பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரைப் படம்: தாய் என நினைத்து பேருந்தின் பின்னால் ஓடிய குட்டிக் குதிரை! - கலங்க வைக்கும் வீடியோ

தாயைப் பிரிந்த குட்டிக் குதிரை பேருந்தில் இருந்த குதிரைப் படத்தைப் பார்த்து துரத்திச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை அருகே தாயைப் பிரிந்த குட்டிக் குதிரை தனியார் பேருந்தில் இருந்த குதிரைப் படத்தைப் பார்த்து தூரத்திச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பிரசிதி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய இக்கோயிலுக்கு வந்துச் செல்கின்றனர். இக்கோயில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகின்றன. 

கோவை பேரூர் பகுதியில் தனியார் பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் குதிரையை பார்த்து, பேருந்தின் பின்னால் ஓடிய குட்டிக் குதிரை.@abpnadu pic.twitter.com/vlo9GV7TrX

— Prasanth V (@PrasanthV_93) September 12, 2022

">

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தாயைப் பிரிந்த குதிரைக் குட்டி, தனது தாயை தேடி திரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிறுத்தம் அருகே காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த தனியார் பேருந்தில் ஒரு குதிரையின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. அப்பகுதியில் சுற்றி திரிந்த குதிரைக் குட்டி சாலைக்கு வந்த போது, தனியார் பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த குதிரை ஸ்டிக்கரை பார்த்துள்ளது. 

அப்போது பேருந்தை நோக்கி வந்த குதிரைக் குட்டி பேருந்தை செல்ல விடாமல் வழி மறித்துடன் பேருந்தையே சுற்றி சுற்றி வந்துள்ளது. சற்று நேரத்தில் பேருந்து கிளம்பிய போது, குதிரை படத்தைப் பார்த்தபடியே பேருந்தை துரத்திச் சென்று கத்தியது. ஸ்டிக்கர் குதிரையை தாய் குதிரை என நினைத்து குதிரைக் குட்டி துரத்திச் சென்றதாக தெரிகிறது. குதிரைக் குட்டியின் பாசத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் குதிரையின் செயலை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காண்போரை கண் கலங்க வைக்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read : T20 World Cup India Squad: அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து... வெறிகொண்ட வேங்கையாக உலகக்கோப்பைக்கு திரும்பிய இந்தியா!

Vadivelu Birthday Special: நேசமணி தொடங்கி பிச்சுமணி வரை... நடிகர் வடிவேலுவின் டாப் மீம் டெம்ப்ளேட்கள்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget