T20 World Cup India Squad: அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து... வெறிகொண்ட வேங்கையாக உலகக்கோப்பைக்கு திரும்பிய இந்தியா!
T20 World Cup 2022 Team India Squad: டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
T20 World Cup 2022 Team India Squad: கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்காக பல்வேறு நாடுகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
🚨 NEWS: India’s squad for ICC Men’s T20 World Cup 2022.
— BCCI (@BCCI) September 12, 2022
Rohit Sharma (C), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (WK), Dinesh Karthik (WK), Hardik Pandya, R. Ashwin, Y Chahal, Axar Patel, Jasprit Bumrah, B Kumar, Harshal Patel, Arshdeep Singh
இந்திய அணி விவரம் :
View this post on Instagram
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.
காத்திருப்பு வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்
உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்களுக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்தது.
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சொந்தத் தொடரின் போது ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களது உடல்நிலை குறித்த தகவலை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த தொடருக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.