மேலும் அறிய

22 வயதில் தேர்தலில் களமிறங்கும் சட்டக்கல்லூரி மாணவி-முன்னாள் அதிமுக மேயரின் மகளுக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ்..!

"திராவிட சித்தாந்தத்தை விட காங்கிரஸ் சித்தாந்தம் பிடித்து இருந்ததால், காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்ய வேண்டுமென இணைந்தேன்”

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 25 வது வார்டில் பூபேஷ், 30வது வார்டில் முத்துலட்சுமி, 48 வது வார்டில் விஜயலட்சுமி, 51 வது வார்டில் செந்தில்குமார், 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 55 வது வார்டில் போட்டியிடும் தீபிகா அப்புகுட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


22 வயதில் தேர்தலில் களமிறங்கும் சட்டக்கல்லூரி மாணவி-முன்னாள் அதிமுக மேயரின் மகளுக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ்..!

தீபிகா அப்புக்குட்டி திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்த விசாலாட்சியின் மகள் ஆவார். அதிமுக சார்பில் மேயராக பதவி வகித்த விசாலாட்சி, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுயில் விசாலாட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போதும் விசாலாட்சி அமமுகவில் தான் உள்ளார். தாய் அமமுகவில் இருக்கும் நிலையில், அவரின் மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 22 வயது ஆன தீபிகா அப்புகுட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது தொடர்பாக தீபிகா அப்புக்குட்டி ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் நான்காம் ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து வருகிறேன். திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பெண்கள் வார்டுகளிலும் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தேன். கட்சி 55 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போல பல பெண்களும் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.  


22 வயதில் தேர்தலில் களமிறங்கும் சட்டக்கல்லூரி மாணவி-முன்னாள் அதிமுக மேயரின் மகளுக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ்..!

எனது குடும்பம் அரசியல் குடும்பம் தான். அம்மா மேயராக இருந்துள்ளார். தற்போது அமமுகவில் இருக்கிறார். சிறு வயதில் இந்திரா காந்தி குறித்து படித்து வளர்ந்தேன். திராவிட சித்தாந்தத்தை விட காங்கிரஸ் சித்தாந்தம் பிடித்து இருந்ததால், காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்ய வேண்டுமென இணைந்தேன்.

சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக பரப்புரை செய்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். சமூக சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறேன். 5 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகல் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மக்களின் குறைகளை தீர்த்து வைக்க விரும்புகிறேன். அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்க பணியாற்றுவேன்” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget