சென்னைஸ் அமிர்தா பட்டமளிப்பு விழா.. தலைவர் ஆர்.பூமிநாதன் பெருமிதம்!
எங்கள் பட்டய படிப்பு முடித்த மாணவர்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன் கூறியுள்ளார்.
Chennais Amirtha: சென்னைஸ் அமிர்தா பட்டமளிப்பு விழா:
சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் தனது 8 வது பட்டமளிப்பு விழாவினை சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் Radisson Blu வில் கொண்டாடியது. இவ்விழா மலேசிய OUM பல்கலைக்கழகத்தில் தொழில்சார் டிப்ளோமா மற்றும் நிர்வாக டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்ற 250 பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.
சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் முன்னணியில் உள்ள OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் கூட்டு சேர்ந்து விருந்தோம்பல் கல்வியில் 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உலகளவில் வேலையில் அமர்த்தி வெற்றி பெற்றுள்ளது.
OUM பல்கலைக்கழகத்தின் தலைவர், YBhg பேராசிரியர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங், செங்கல்பட்டு, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் பட்டயப்படிப்பு பயின்ற மாணவர்களுக்கு டிப்ளோமாக்களை வழங்கினார். அவர் தனது உரையில், எதிர்கால விருந்தோம்பல் தலைவர்களை வடிவமைப்பதில் கல்வியின் பங்கை வலியுறுத்தினார், சென்னைஸ் அமிர்தாவின் கல்விச் சிறப்பையும் மற்றும் மாணவர்களின் முழுமையான மேம்பாட்டிற்காகப் நிறுவனத்தின் பங்கையும் பாராட்டினார். மாணவர்கள் தங்கள் திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்துமாறு அவர் ஊக்குவித்தார்.
அர்ப்பணிப்பு தொடரும்:
சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன், மாணவர்களை வாழ்த்தி, "எங்கள் பட்டய படிப்பு முடித்த மாணவர்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் திறமைகளை வளர்ப்பதற்கும், விருந்தோம்பல் துறையில் வருங்கால தலைவர்களை தயார்படுத்துவதற்கு சென்னைஸ் அமிர்தாவின் அர்ப்பணிப்பு என்றும் தொடரும் என்று கூறினார். நிறுவனத்தின் மதிப்புகளான புதுமை, இரக்கம் மற்றும் professionalism ஆகியவற்றை நிலைநிறுத்த மாணவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் OUM பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்/துணை இணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் யோன் ரோஸ்லி டாட் திரு. முகமட் யசெட் பஹாமன், டைரக்டர் குரூப் ஆஃப் மார்க்கெட்டிங் OUM மலேசியா; திரு கலையரசன்,Chairman Future Dream Academy மலேசியா; திரு. ஜெய் நானக் சிங், CEO,Future Dream Academy மற்றும் சென்னையிஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் பிரமுகர்கள் திரு. லியோ பிரசாத், தலைமை கல்வி இயக்குனர், டாக்டர் டி. மில்டன், டீன், மற்றும் பல்கலைக்கழக விவகாரத் தலைவர் திருமதி. பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.