மேலும் அறிய

காதல் மோதல் " நீ உயிருடன் இருக்க மாட்ட " துப்பாக்கியை வைத்து சம்பவம் செய்த பெண்

அவருடன் பேசுவதை விட்டு விடு இல்லையென்றால் நீ உயிருடன் இருக்க மாட்ட - துப்பாக்கி சூடு நடத்திய பெண்

தனிமையில் சந்தித்து நெருக்கம்

மத்திய பிரதேச மாநிலம் மும்பையில் உள்ள கோவண்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நதீம் அலிஸ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பைகன்வாட் பகுதியை சேர்ந்தவர் 23 வயதுடைய தபசும் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தத்தக்க சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் நதீம் அலிஸ் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 13 வயதுடைய இளம் பெண் ஷிஃபா என்ற பெண்ணுடன் பழகி அவரையும் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நதீம் அலிஸ் தன்னை தவிர வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த தபசும் ஷிஃபா குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்

" நீ உயிருடன் இருக்க மாட்ட "

வீட்டில் இருந்த ஷிஃபாவிடம் நானும் நதீமும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம் அவருடன் பேசுவதை விட்டு விடு இல்லையென்றால் " நீ உயிருடன் இருக்க மாட்ட " என மிரட்டி இருக்கிறார். அதற்கு ஷிஃபா என்னை தான் நதீம் உண்மையாக காதலிக்கிறார் நான் அவரை விட்டு பிரிய மாட்டேன் என கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றது. எனவே அச்சமடைந்த ஷிஃபாவின் பெற்றோர் அவரது மகளை தங்களது சொந்த ஊரான பைபாவன் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

தங்களது சொந்த ஊரிலேயே ஆறு மாதம் இருந்த ஷிஃபா அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் தன்னால் இருக்க முடியவில்லை என கூறி மீண்டும் கோவண்டிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி வந்திருக்கிறார். அப்போது ஷிஃபாவை சந்தித்த நதீம் அவருடன் பேச தொடங்கியிருக்கிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தபசும் தனது சகோதரனுடன் ஷிஃபா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது ஷிஃபா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே காதல் குறித்து மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.

அப்போது தபசும் உடனிருந்த அவரது சகோதரர் அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை தபசுமிடம் கொடுத்த நிலையில் தபசும் ஷிஃபாவின் கன்னத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார்.

பின்னர் மகள் காயமடைந்ததை அறிந்து வீட்டிற்கு சென்ற ஷிஃபாவின் தந்தை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷிஃபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிஃபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான தபசும் மற்றும் அவரது சகோதரரை கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து பதுங்கி இருக்கும் காதலன் நதீமை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் காதல் பிரச்சனையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget