மேலும் அறிய

Vandalur Zoo: வண்டலூர் போறீங்களா..! வண்டலூரில் இருந்து வந்த அப்டேட் இதான்..! சரியா பிளான் பண்ணுங்க..!

Vandalur Zoo Open: தொடர் விடுமுறை எதிரொலியாக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது

வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park (AAZP) ) 
 
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தலமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம். 

 ஷவரில் குளித்து விளையாடும் யானை
ஷவரில் குளித்து விளையாடும் யானை

2000 விலங்குகள் ( vandalur zoo animals  ) 
 
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில், சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.

ARIGNAR ANNA ZOOLOGICAL PARK - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
ARIGNAR ANNA ZOOLOGICAL PARK - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

பூங்காவிற்கு விடுமுறை ( vandalur zoo open today )
 
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக, கடந்த சில நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில், விஜயதசமி விடுமுறை தினத்தை முன்னிட்டு, தொடர் விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இன்றும் அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என பூங்கா நிர்வாகம் எதிர்பார்க்கிறது.  அதன் அடிப்படையில் இன்று  ( 24 - 10 -2023 ) வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை என்றாலும், விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

ARIGNAR ANNA ZOOLOGICAL PARK - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
ARIGNAR ANNA ZOOLOGICAL PARK - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

நிறைவேறிய பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது

தற்பொழுது சிங்கம் உலாவிடத்தில் 7 சிங்கங்கள்  உள்ளன. மான்கள் உலாவிட பகுதியில் ஏராளமான கடமான், புள்ளிமான் மற்றும் பிற மான் வகைகள் உள்ளன. பார்வையாளர்கள் வசதிக்காக உலா வரும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் உலாவிட பகுதிக்கு செல்வதற்காக மட்டும் தனி வழியை அமைத்துள்ளது. பார்வையாளர்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக மான்கள் உலாவிடத்தை அடையலாம். பாதுகாப்பு சுவர் மற்றும் சுற்றுச்சூழல் சீரமைக்கப்பட்டு உலா மற்றும் நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள உலாவிடத்திற்கு,  செல்லும் வகையில் குளிர்சாதன பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் எளிதான பெற்றுச்செல்லும் வகையில் க்யூ ஆர் கோட் அடிப்படையிலான நுழைவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
Embed widget