மேலும் அறிய

Crime: மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகைப்படத்தால் சிக்கிய பள்ளி வேன் உதவியாளர்!

பள்ளி ஆசிரியர்கள் உள்பட அனைவரது புகைப்படங்களையும் காண்பித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சிறுமியை வேனில் கூட்டி செல்லும் வேன் உதவியாளர் சத்யராஜ் என்பவர் தான் குற்றத்தில் ஈடுபட்டவர் எனத் தெரியவந்தது

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

தினமும் வேன் மூலம் பள்ளிக்கு சிறுமி சென்று வந்த நிலையில், கடந்த 20ம் தேதி பள்ளி விட்டு வீட்டுக்கு அழுதுபடி வந்துள்ளார்.

தொடர்ந்து அழுதபடியே அவர் வந்த நிலையில் கவலையில் பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்,  யாரோ அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேராக பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமியை அழைத்துச் சென்று பள்ளி ஆசிரியர்கள் உள்பட அனைவரது புகைப்படங்களையும் காண்பித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிறுமியை தினசரி வேனில் கூட்டிச் செல்லும் வேன் உதவியாளர் சத்யராஜ் என்பவர் தான் குற்றத்தில் ஈடுபட்டவர் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பள்ளி வேன் உதவியாளர் சத்யராஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ சட்டம் : 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன.

  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது).

மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!

Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget