சென்னையில் ஒரு முட்டையால் வந்த சண்டை !! ரவுடி கைது !! ஏன் தெரியுமா ?
அத்தோ கடையில் மசாலா முட்டை கூடுதல் விலைக்கு விற்பதாக தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் ஒரு முட்டையால் வந்த சண்டை !! ரவுடி கைது !! ஏன் தெரியுமா ?
சென்னை வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்தவர் பாக்கியம் ( வயது 47 ) வீட்டருகே அண்ணா சாலை பிரதான சாலையில் அத்தோ கடை வைத்துள்ளார். 5 - ம் தேதி இவரது கடைக்கு வந்த நபர் , வாழைத் தண்டு சூப் வாங்கி குடித்து விட்டு மசாலா முட்டை கேட்டுள்ளார். அதற்கு மசாலா முட்டை 15 ரூபாய் என பாக்கியம் கூறியுள்ளார். மற்ற கடைகளில் 10 ரூபாய் தானே ஏன் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்கிறீர்கள் எனக் கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.
பிரச்சனை செய்தவரை பாக்கியத்தின் தங்கை கணவர் தமிழ்வாணன் ( வயது 48 ) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மர்ம நபர், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டதில், தமிழ்வாணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த காட்டான் மோகன் ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். இவர் மீது, ஐந்து வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோகன் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரீல்ஸ் மோகம் ; இருசக்கர வாகனம் பயணத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருவள்ளூரைச் சேர்ந்த சசி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் விலை உயர்ந்த ஹெல்மெட் வாங்குவதற்காக , இரு சக்கர வாகனத்தில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர்.
மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது தங்கள் செல்போனில் ரீல்ஸ் எடுத்தபடி சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற பைக்கின் மீது இவர்களின் வாகனம் மோதியதில் , 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அங்கே அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உதவி செய்வதற்காக அருகில் வந்துள்ளார். இதற்கிடையில் மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியுள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 5 பேரும் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி வாகனத்தை ஓட்டிய 2 பேருக்கு லேசான காயங்களும், மற்ற 3 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















