Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!
கொரோனா தடுப்புப் பணிக்காக ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பணபுரிய வாய்ப்பு வந்துள்ளது.
சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பணிகளில் சேர விரும்புவோர் இன்று (மே 26) இரவு 8 மணிக்குள் இணையத்தில் பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் தீயாய் பரவிவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கும் அமலில் உள்ளதால் பாதிப்பின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துவருவதால் பல இடங்களில் கொரோனா சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சியின் கீழ் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பிற்கான அழைப்பு விடுத்துள்ளது. இதில் MBBS மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் செவிலியர்களுக்கு DGNM மற்றும் பிஎஸ்சி நர்சிங் முடித்தர்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் ரூ 60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள், மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் 189 செவிலியர் பணிகள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பானை வெளியாகியுள்ள நிலையில், தகுதியுள்ள நபர்கள் மருத்துவ அலுவலர் பணிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையத்திலும் மற்றும் செவிலியர் பணிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணைய பக்கத்திலும் மே 26-ஆம் தேதி அதாவது இன்று இரவு 8 மணிக்குள் பதிவுசெய்யுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து விண்ணப்பித்த நபர்களுக்கு சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை கூட்ட அரங்கில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மே 28-ஆம் தேதி பணியில் உடனடியாக சேருமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியானது முற்றிலும் தற்காலிகமானது எனவும், எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதோடு பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கவேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு What’s App Number (1. Medical Officer- 9498346492 2. Staff Nurse 9498346493) என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.