(Source: ECI/ABP News/ABP Majha)
கல்வி, மருத்துவத்துக்கான செலவு இலவசம் அல்ல.. அதற்குப்பெயர் இதுதான்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
இலவசம் வேறு, நலத்திட்டம் வேறு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே தற்போது நடைபெற்று வருகிறது. கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசமாகாது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, சுகாதார மையம், சிங்காரச் சென்னை 2.0 பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கொளத்தூர் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் முன்னதாக உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவித்தார்.
சொந்த தொகுதிக்கு வருவது மகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”சொந்த தொகுதிக்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கல்வி அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்தது. மாணவர் சமுதாயம் மீது இருக்கும் அக்கறையின் காரணமாக இதை செய்வதை அரசின் கடமையாகக் கருதுகிறோம்.
இலவசம் வேறு, நலத்திட்டம் வேறு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே தற்போது நடைபெற்று வருகிறது. கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசமாகாது.
மேலும் படிக்க : Salman Rushdie: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து...! நடந்தது என்ன?
இலவசம் Vs சமூக நலத்திட்டங்கள்
ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி. உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என அரசு நினைக்கிறது.
இலவசம் என்று கூறும்போது இதைத் தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி, கல்லூரிக் கனவு, நான் முதல்வன், பள்ளிகளில் காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்துமே மக்கள் நலத் திட்டங்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இலவசங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் வகையில் இவை செயல்படுத்தப்படுகின்றன.
இலவசம் கூடாது என அறிவுரை கூற சிலர் புதிதாக வந்திருக்கிறார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை. இது பற்றி இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகிவிடும், இங்கே அதை பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் படிப்பிலே கவனம் செலுத்துங்கள், உங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உயர் கல்வியைத் தொடருங்கள், குறிப்பாக பெண்கள் பட்டம் வாங்கியதோடு நிற்காமல், தகுதியான பணிகளைத் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கையை அனைவரும் பெற வேண்டும் என்பதை உங்கள் தந்தையாக நின்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசினார்.
மேலும் படிக்க: India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்