Salman Rushdie: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து...! நடந்தது என்ன?
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. சாத்தானின் இரவுகள் என்ற புத்தகத்தை எழுதியதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கியதுடன், கொலை மிரட்டலுக்கு ஆளாகி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மிகவும் பிரபலமான வடக்கு நியூயார்க் நகரத்தில் உள்ள சதாகுவா நிறுவனத்தில் கௌரவ விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே அமர்ந்திருந்த நபர் திடீரென சல்மான் ருஷ்டி இருந்த மேடை மீது ஏறினார். அவர் சட்டென்று சல்மான் ருஷ்டி மீது சரமாரியாக தாக்கியதுடன், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். இதனால், நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். பின்னர், அங்கிருந்தவர்கள் சல்மான் ருஷ்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.
சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் இரவுகள் புத்தகம் இஸ்லாமியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த புத்தகம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவருக்கு பலரும் கொலை மிரட்டல் விடுத்தனர். அவரது சாத்தானின் இரவுகள் புத்தகத்தை ஈரான் நாட்டில் தடை விதித்தனர்.
ஈரானின் மறைந்த தலைவர் ஹயதுல்லா ருஹோல்லா கொமேனி சர்ச்சைக்குரிய சாத்தானின் இரவுகள் புத்தகத்தை எழுதியதற்காக சல்மான் ருஷ்டியின் உயிருக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதாவது, 2012ம் ஆண்டிலே சல்மான் ருஷ்டியை கொல்பவர்களுக்கு ரூபாய் 18.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஈரான் மதவாத அமைப்பு அறிவித்திருந்தது.
Author Salman Rushdie, whose writing led to death threats, has been attacked on stage at an event in western New York, reports AP
— Press Trust of India (@PTI_News) August 12, 2022
இந்த நிலையில், அமெரிக்காவின் மிகவும் பிரபலமான வடக்கு நியூயார்க் நகரத்தில் உள்ள சதாகுவா நிறுவனத்தில் கௌரவ விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீரென சல்மான் ருஷ்டி இருந்த மேடை மீது ஏறினார். அவர் சட்டென்று சல்மான் ருஷ்டி மீது சரமாரியாக கத்தியால் தாக்கினார். இதனால், நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்