Chennai Powercut : இன்றும் நாளையும் எங்கெல்லாம் பவர் கட்? ஏரியாவாரியாக லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்!
மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இது நகரம், கிராமம் ஆகிய பகுதிகளைப் பொறுத்து நேர அளவு மாறுபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் இன்றும்,நாளையும் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படுகிறது.
அதன்படி ஜூன் 29 ஆம் தேதி புதன்கிழமையான இன்று பெரம்பூர் துணை மின்நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிஎம்பிடி பகுதியில் தேவி நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, ராஜன் நகரிலும், ஐ.சி.எப் ஏரியாவில் வெள்ளாள தெரு, தாகூர் நகர், செட்டி தொட்டம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல் செம்பியம் பகுதியில் கௌதமபுரம், திருவள்ளுவர் தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு, கார் நகர். நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கஸ்தூரி பாய் நகர் ஆகிய இடங்களிலும், பெரியார் நகரில் உள்ள எஸ்.ஆர்.பி காலனி, ஜவகர் நகர், ராம் நகர், பேப்பர் மில்ஸ் ரோடு பகுதி, ஜெகநாதன் தெரு, பல்லார்டு தெரு, இ.எஸ்.ஐ மருத்துவமனை தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அதேசமயம் மாதவரம் பகுதியில் ஜி.என்.டி ரோடு, எலிசபெத் நகர், தேவகி நகர், துர்க்கை நகர் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் தேவைகளை விரைந்து முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாளை (ஜூன் 30 ஆம் தேதி) மயிலாப்பூரில் பாரதி சாலை, பெருமாள் முதலி சாலை, தாம்பரம் பகுதியில் பெருங்களத்தூர் காந்தி தெரு, கிருஷ்ணா ரோடு, விவேக் நகர், பெரும்பாக்கம் தர்மலிங்கம் நகர், மீனாட்சி நகர், ஏரிக்கரை ரோடு, திருவள்ளுவர் தெரு, நேரு தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, குளக்கரை தெரு, சத்ய சாய் நகர், சங்கரபுரம், பஜனை கோவில் தெரு ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
அண்ணாநகரில் ஆர்.கே.நகர், கஜபதி காலனி, லட்சுமி டாக்கீஸ் ரோடு, ஐய்யாவு தெரு, செங்கல்வராயன் தெரு, தனலட்சுமி நகர், சீனிவாச நகர், அஷ்டலட்சுமி 23வது தெரு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகள்.
அம்பத்தூர் பகுதியில் டிவிஎஸ் நகர், மோகன் கார்டன், ராஜா தெரு, பாரதிதாசன் தெரு, காமராஜ் தெரு, விஜய லட்சுமி புரம் சுற்றுப் பகுதிகள், அடையாறு/ ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சோழமண்டல கலை கிராமம், இசிஆர் பகுதி, அம்பேத்கர் தெரு, நீலாங்கரை பாண்டியன் சாலை, அறிஞர் அண்ணா நகர், காந்தி தெரு, காமராஜர் தெரு, பாலவாக்கம் பிலிப்ஸ் சாலை, சுல்தான் அகமத் தெரு மற்றும் சுற்றுப் பகுதிகள்.
தரமணியில் சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்தா ராம் நகர், டி.ஏ.என்க்லேவ் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும், கிண்டியில் செயின்ட் தாமஸ் மவுண்ட் ராமர் கோவில் தெரு, கலைஞர் நகர், குமரன் நகர், பாண்டியன் தெரு, இந்திரா நகர், மேட்டுத் தெரு, ராமாபுரம் காந்தி நகர், நேரு நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
வேளச்சேரியில் மெயின் ரோடு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர் ஆகிய பகுதிகளிலும், கே.கே.நகரில் கே.கே.நகர் கிழக்கு மற்றும் தெற்கு, அசோக் நகர், சூளைமேடு, கோடம்பாக்கம், ரங்கராஜ புரம், தசரத புரம், அழகிரி நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகள்
தண்டையார் பேட்டையில் என்.டி.ரோடு, அசோக் நகர், இருசாப்பா தெரு, பல்லவன் நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்