மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
சென்னை ஏர்போர்ட்டில் வாக்குவாதம்: சவுதி, துபாய் பயணிகள் குவிந்தனர்!
சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள் குடியுரிமை சோதனை கவுண்டர்களில் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் .
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு நாடுகளின் சர்வதேச விமான பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அரசால் அனுமதி பெற்ற நாடுகளுக்கு மட்டும் விமான சேவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் கட்டாயம், கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகள் சான்றிதழ் காட்டினால், மட்டுமே இந்தியாவிற்கு வரும் விமானங்களில் அனுமதிக்கபடுகின்றனர். இந்நிலையில் இன்று சவுதி அரேபியா மற்றும் துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் சென்னை விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை கவுன்டர்களில் உள்ள அதிகாரிகளிடம் சோதனை செய்ய பயணிகள் வரிசையில் நின்றுள்ளனர். அப்பொழுது இரண்டு விமானங்களில் வந்த பணிகளும், ஒரே நேரத்தில் குடி உரிமை பரிசோதனை கவுண்டர்களுக்கு வந்ததால், அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த சமயத்தில் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுன்டர்கள் மூன்று மட்டுமே செயல்பட்டு வந்ததால், பயணிகள் வெகு நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது . இதன் காரணமாக பயணிகள், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டு, விமான நிலையத்தில் கூட்டமாக இருந்ததனர். நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் ஒரு கட்டத்தில், விமான நிலையத்தில் முறையாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி, விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது, இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்ற விமான நிலைய நிர்வாகம் உடனடியாக, மேலும் 2 குடியுரிமை சோதனை கவுன்டர்களை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள விமான நிலைய நிர்வாகம், இன்று இரவுக்குள் 4 அல்லது 5 குடியுரிமை சோதனை கவுன்டர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுன்டரில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகள் கூடியதால், கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion