Chennai Rain: சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடியகொட்டிய மழை.. இன்னும் 3 மணிநேரத்துக்கு நீடிக்கும்..
சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
![Chennai Rain: சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடியகொட்டிய மழை.. இன்னும் 3 மணிநேரத்துக்கு நீடிக்கும்.. moderated Rain continue in Chennai from midnight..Warning that it will continue for the next 3 hours Chennai Rain: சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடியகொட்டிய மழை.. இன்னும் 3 மணிநேரத்துக்கு நீடிக்கும்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/f85721e611e726ef24ce547ee6a27b34169252955246278_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
சென்னையில் மழை:
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய மிதமான கொட்டியது. குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிதமானபெய்தது. தற்போது வரையில் கருமேகங்கள் கூடியிருப்பதால் சென்னை மாநகர் முழுவதும் இன்னும் இரவு நேரம் போன்றே காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் வாக ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பெய்த இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவானது.
புறநகர் பகுதிகளில் மழை:
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் நிலவுவதோடு, லேசான மழையும் பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை தொடர்கிறது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-08-24-04:37:54 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அயனாவரம்,செங்கல்பட்டு,மாம்பலம்,பொன்னேரி,புரசைவாக்கம்,சோழிங்கநல்லூர்,ஊத்துக்கோட்டை,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/WP6uTCFDmE
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 23, 2023
திருவள்ளூரில் கனமழை:
திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ஜமீன் மற்றும் கொரட்டூரில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவாலங்காடு, திருத்தணியில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் சோழவரத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் கொட்டியது. அதோடு, பூண்டி, ஆவடி, செங்குன்றம், தாமரைப்பாக்கத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 2 சென்டி மீட்டர் மழையும், ஊத்துக்கோட்டையில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
3 மணி நேரத்திற்கு மழை தொடரும்:
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், அமைந்தக்கரை,மதுராந்தகம்,மயிலாப்பூர், ஆலந்தூர், திருக்கழுகுன்றம், அயனாவரம், செங்கல்பட்டு, மாம்பலம், பொன்னேரி, புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், ஊத்துக்கோட்டை மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)