மேலும் அறிய

இசைவாணி மீது நடவடிக்கை.. அன்புமணிக்கு பதிலடி - சீறும் சேகர்பாபு

மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

ஆன்மீக பயண பேருந்துகள் தொடக்கம்

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்த கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ;

இந்த ஆட்சிக்கு பிறகு ஆன்மீகப் பயணத்திற்கு செல்ல வேண்டும் என்ற மூத்த குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக அவர்களுக்கு துணைக்கு அழைத்து சென்று திருக்கோயில் தரிசனத்திற்கும் இயலாமல் இருக்கின்ற மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆன்மீகப் பயணத்திற்கும் உறுதுணையாக இருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 420 பேரை காசிக்கு அழைத்துச் செல்ல போகிறோம். 2024-ஆம் ஆண்டில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1008 மூத்த குடிமக்கள் ரூ.1.58 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 5 கட்டங்களாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

2024-25 அறிவிப்பு எண் 24 - ன்படி, 1000 பக்தர்கள் அரசு நிதி 5.1.58 கோடி செலவில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று 200 பக்தர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதன் முதற்கட்ட பயணம் இன்று கந்தக்கோட்டத்தில் தொடங்கி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மண்டலங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள் செல்கின்றனர். இதற்காக செலவுகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

இதுவரையில் திருவிளக்கு பூஜையில் 47,304 பெண்கள் பங்கேற்று உள்ளனர். 1800 நபர்களுக்கு கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்ட நிலையில் 1400 பேருக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்மீகப் பயணத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும்.

வேலை தெரியாதவர் முதலமைச்சராக செயல்பட்டு வருவதாக தங்கர்பச்சன் பேச்சு குறித்தான கேள்விக்கு 

முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் தங்கர்பச்சான் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய காணொளி காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். அப்படி புகழ்ந்து பேசி இருப்பார். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என தெரிவித்தார்.

கோவில் யானைகளுக்கு அந்தந்த கோவில்களிலே குளியல் தொட்டி, மருத்துவ கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் அழைத்து செல்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்தும்  முதல்வர் தான் நமது முதல்வர். 

பாமக நிறுவனர் குறித்து முதல்வர் கூறியதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அது என்ன Unparilment word ஹா எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி விமர்சித்தார்கள் என்பதை  அன்புமணி திரும்பி பார்க்க வேண்டும்.ஆதினங்களுடன் கலந்தாலோசனை செய்து சூரியனார் கோவில் ஆதினம் மடம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

இசைவாணி மீதான புகாருக்கு சட்டபடி நடவடிக்கை ?

எந்த மதத்தினரையும் வேறு மதத்தினர் புண்படுத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தவறு இருப்பின் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget