பஸ் ஸ்டாண்ட் ஆ !! ஷாப்பிங் மாலா ! வாயைப் பிளந்த பயணிகள்..! கிளாம்பாக்கத்தில் பாட்டு கச்சேரி ..!
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகள் இளைப்பாறுவதற்கு வசதியாக பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விழாவாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை என்பது பல நூற்றாண்டுகளாக தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவாக உள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து தமிழர்களும், எந்தவித வேறுபாடு இன்றி தைத்திருநாளை ஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை - பொதுமக்கள் படையெடுப்பு
அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை வர உள்ளதால், சென்னையில் தங்கி பணியாற்றி வரும் பல்வேறு ஊர்களை சார்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி நேற்று மாலை முதல் படையெடுத்து தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் Kilambakkam Bus Stand
சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்தாண்டு பயன்பாட்டிற்கு வந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையம், பல்வேறு விமர்சனங்களை பெற்றது. பொதுமக்கள் அவதி அடைவதாகவும் வேதனை தெரிவித்து வந்தனர். இதனால் அரசுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் தலைவலி ஏற்பட்டது.
தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதை சரி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது தொடர் விடுமுறை தினத்தன்று, பொதுமக்களை சரியாக அரசு கையாண்டிருந்தது. இதனால் சொந்த ஊருக்கு பெரிய அளவில், பிரச்சனை இல்லாமல் பொதுமக்கள் சென்று வந்தனர். அதேபோன்று பொங்கலுக்கும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு
அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் இளைப்பாறுவதற்கு வசதியாக, மேடை அமைக்கப்பட்டு பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இது எங்கும் செய்யப்படாத நிகழ்வாக இது பார்க்க முடிகிறது. இதனால் முன்பதிவு செய்துவிட்டு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், சிறிது நேரம் பாட்டு கச்சேரி ரசித்து விட்டு செல்கின்றனர். அதேபோன்று நடைமேடை அருகே விளையாடுவதற்கான சிறிய ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகளுக்கு இது புதுவித அனுபவமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள்
திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் கும்பகோணம், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் ஆகிய ஊருக்கு செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம்
செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து செல்ல உள்ளது. எனவே இந்த ஊர்களுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம், மாநகர பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

