Exclusive : ஏகாம்பரநாதர் கோவில், வெள்ளிப் பல்லாக்கில் எடை குறைப்பு.. மாறுபட்ட தகவல்களால் எழும் சந்தேகம்..!
kanchipuram ekambareswarar temple scam : அந்த ஆவணத்தில் மரத்தின் மீது வெள்ளித் தகடுகள் போர்த்திய பல்லாக்கு ஒன்று பல்லாக்கில், ஒரு சில பாகங்கள் வெள்ளி தகடுகள் இல்லை, என குறிப்பிடப்பட்டுள்ளது
மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த நகரமாகவும், விளங்கி வருகிறது. அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள ' ஏகாம்பரநாதர் கோவில் ' ( kanchipuram ekambareswarar temple ) மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. சிவ தலங்களில் மிக முக்கிய தளமாகவும் இக்கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடைபெறுவதாக , அவ்வப்போது குற்றச்சாட்டுகள் இருந்து வண்ணம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளி பல்லாக்கு ( Silver palanquin )
அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, வெள்ளி பல்லாக்கு ( Silver palanquin ) ஒன்று உள்ளது. அந்த பல்லாக்கு அமைப்பானது மரத்தில் செய்யப்பட்டு, அதன் மீது வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த வெள்ளி பல்லாக்கில், தகடுகள் மாயமானது என பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக, காஞ்சிபுரம் பகுதி சேர்ந்த பக்தர் தினேஷ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார்.
தகடுகள் எதுவும் திருடு போகவில்லை
அதில், காஞ்சிபுரம் ஏகாம்பரதர் கோவிலில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்ற பொழுது வெள்ளி பல்லாக்கில், இருந்த தகடுகள் பிரித்து திருடு போனது சம்பந்தமாக, கோவில் செயல் அலுவலர் அல்லது நகை சரிபார்ப்பு அலுவலர் யாராவது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்களா ? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தகவல் அறிவு உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பதில்கள் பின்வருமாறு : " நகை சரிபார்ப்பு அலுவலர்களால், வெள்ளி பல்லாக்கு அளவு எடுக்கப்பட்டு, வெள்ளி தகடுகள் தேய்மானம் ஏற்பட்டது, இதனால் இழப்பு எதுவும் இல்லை என தெரிவித்தார்கள். தகடுகள் எதுவும் திருடு போகவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது ".
முரணான தகவலால் குழப்பம்
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையம் உத்தரவின் படி , பக்தர் தினேஷ் நேரடியாக சென்று வெள்ளி பல்லாக்கு தொடர்பான தேவையான ஆவணங்களை குறித்த ஆய்வு செய்யதார். அதில் முன்னுக்குப் பின் முரணான தகவல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கிறார் தினேஷ்.
இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், வெள்ளி மற்றும் தங்க இனங்கள் சம்பந்தமாக இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு உத்தரவிட்டு அதன் பெயரில் ஆய்வு செய்த போது , வெள்ளி பல்லாக்கில் இருந்து வெள்ளி தகடுகள் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது, பலரும் கண்கூடாக பார்த்தாலும், இந்து சமய அறநிலைத்துறை அதை தேய்மானம் எனக் கூறி மூடி மறைத்து வந்தனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காவல்துறையின் கீழும் எதுவும், திருடு பொய்யான தகவலை அளித்து வந்தது. இது சம்பந்தமாக , தகவல் ஆணையர் அனைத்து ஆவணங்களையும் நீங்கள் கோவிலில் நேரடியாக ஆய்வு செய்து, தேவையான ஆவண நகல்களையும் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார். இருந்தும் கோவில் நிர்வாகம் சார்பில் முழுமையாக அனைத்து ஆவணங்களையும் காட்டாமல், குறிப்பிட்டு வெள்ளி பல்லாக்கின் தகவல்களை முன்னும் , பின்னும் மூடி மறைத்து தகவலை வழங்கி உள்ளனர். இந்தத் தகவலின் படி வைத்துப் பார்த்தால், சுமார் 2 கிலோவிற்கு மேல் வெள்ளித் தகடுகள் திருடு போனது வெளிச்சம் ஆகியுள்ளது, என தெரிவிக்கிறார் தினேஷ். அதை அதிகாரிகள் கைப்படவே எழுதியும், கொதித்துள்ளதாக தினேஷ் நம்மிடம் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
நேரடியாக ஆய்வு செய்து பெற்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன ?
அந்த ஆவணத்தில் மரத்தின் மீது வெள்ளித் தகடுகள் போர்த்திய பல்லாக்கு ஒன்று பல்லாக்கில், ஒரு சில பாகங்கள் வெள்ளி தகடுகள் இல்லை , மீதமுள்ள வெள்ளி தகடுகள் கணக்கிட்டு வெள்ளி எடை கிராம் மதிப்பீடு செய்யப்பட்டது. பல்லாக்கில வெள்ளி எடை கிராம் 8800.00 என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பாக வெள்ளி 1 கிராம் 50 வீதம், 4 லட்சத்து 44 ஆயிரம் மட்டும் ( 2020 ஆம் ஆண்டு நிலவரம் ) என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த வெள்ளி அளவு
அதே ஆவணத்தில் குறிப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில் வெள்ளி பல்லாக்கில் வெள்ளி இல்லை, பல்லாக்கு மட்டும் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் வெள்ளி பல்லாக்குமே வெளியே எடுத்து சரிபார்த்த பொழுது, அநேக இடங்களில் வெள்ளி தகடுகள் இருந்தன. அவ்வாறு இருந்த வெள்ளி தகடினை அளவு, மேற்கொள்ளப்பட்டு, அதன் விவரம் பதிவு செய்யப்பட்டது.
தற்பொழுது, பல்லாக்கில் உள்ள வெள்ளி தகடுகளின் உத்தேச எடை கிராமம் 8800.00. 1954 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 950.00 தோலா ( 1 தோலா = 12 கிராம்) அதேபோன்று 1984 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டபோது, 11080.00 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் வெள்ளி பல்லாக்கில் இருந்த, வெள்ளி அளவு குறைந்துள்ளது, என்பதை அறிய முடிகிறது. ஆனால் ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தகவலில், தகடுகள் தேய்மானம் ஏற்பட்டது இழப்பு எதுவும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்
இது குறித்து கோவில் செயல் அலுவலரிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சி செய்த பொழுது, நேரில் வந்து சந்தியுங்கள் எனக் கூறிக் கொண்டே தொலைபேசி அழைப்பை செயல் அலுவலர் துண்டித்து விட்டார்.
,