மேலும் அறிய
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை.. குளுகுளு காற்று..
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பயங்கர இடி சத்தத்துடன் மின்னல் மின்னியவாறு மழை பெய்ய தொடங்கியது. காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதனை ஒட்டி உள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, களக்காட்டூர், தாமல்,பாலு செட்டி சத்திரம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காரை, ஏனாத்தூர், வையாவூர், நத்தப்பேட்டை, அய்யம்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
திடீரென பெய்யும் மழையின் காரணமாக பல்வேறு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் காலையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் சற்று குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்
இதே போன்ற செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் ,வண்டலூர், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. வண்டலூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகள் படித்த கனமழையின் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையும் நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர். நள்ளிரவில் மழை பெய்ததன் காரணமாக அதிகாலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வரும் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் (அக். 6, 7) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8, 9-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, 10, 11-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.10.2023 மற்றும் 11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion