ஐயப்ப பக்தர்கள் நலனுக்காக , கேரளாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை !! என்ன தெரியுமா
ஐயப்ப பக்தர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் , தமிழ்நாடு அரசின் சார்பில் கேரளாவில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது - சேகர்பாபு

கட்டிட பணிகள் ஆய்வு
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்டப்பட்ட பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சி வார்டு அலுவலகத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
முரசொலி மாறன் பூங்கா ஆய்வு
திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பாக மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்பு , செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ;
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முரசொலி மாறன் பூங்காவை ஒரு நாளில் 2,000 நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு வசதிகள் உடன் இந்த பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது.
சுழற்சி முறையில் அதிகாரிகள்
தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பாக தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாங்கூர் தேவஸ்தானத்தில் அதற்கான அனுமதி பெறப்பட்டு கன்னியாகுமரியில் இருக்கின்ற இரண்டு அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிகளில் இருக்கிறார்கள்.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அகலப்படுத்தும் பணிகள் குறித்தான கேள்விக்கு ;
அந்தப் பணிகளை மாநகராட்சி எடுத்துக் கொண்டு அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது
எஸ்.ஐ.ஆரின் ஒரு பகுதியாக தமிழகத்தில் 92 சதவீத படிவங்கள் வீடு வீடாக சென்று வழங்கும் பணிகள் முடிந்துள்ளது என தேர்தல் ஆணையம் கூறியது குறித்தான கேள்விக்கு ;
எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக திமுக மட்டும் தான் களத்தில் நின்று கொண்டிருக்கிறது எனவும் எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்தாலும் அதில் இருக்கக் கூடிய குளறுபடிகளை கலைத்து சூட்சுமங்களை தகர்த்து எறிந்து வருகிறார் முதலமைச்சர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக பாக முகவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்து இருக்கிறார் முதலமைச்சர்.
வஞ்சக சூழ்ச்சி வலையை மத்திய அரசு விரித்தாலும் அதை அறிந்து , திமுக எப்போதும் செயல்படும். உதய சூரியன் மீண்டும் 2026 - ல் உதயமாகும் என தெரிவித்தார்.
திருக்கோயில் காவலாளிகள் கொலை தொடர்பான கேள்விக்கு ;
குறிப்பிட்டு எப்படி சொல்ல முடியும் , திட்டமிட்டு நடைபெறுகிறது அல்லது தவறு நடைபெறப் போகிறது என்று அறிந்தவுடன் தடுக்க தவறினால் குற்றம் சாட்டு சொல்லலாம். நடந்த செயலுக்கு இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம் எனவும் அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி இருக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். இது சட்டத்தின் ஆட்சி , சாத்தான்களின் ஆட்சி அல்ல , சட்டத்தின் முன் குற்றவாளியை நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனையை நிச்சயம் பெற்று தருவோம் என தெரிவித்தார்






















