கூவத்தில் தவறி விழுந்த இளைஞர்: இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கி உயிரை கையில் பிடித்தார்!
மரக்கிளையை பிடித்து 10 மணி நேரமாக தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர், இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்து உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மெட்டுக் குளம் பகுதியை சேர்ந்த புகழ் (வயது28), கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலை முடிந்து வீட்டிக்கு சென்றுக்கொண்டிருந்தார். மெட்டுக்குளம் கூவம் தரைப்பாலம் வழியாக நடந்துசென்றுக்கொண்டிருந்தபோது, அவர் கால்தடுமாறி கூவம் ஆற்றில் விழுந்தார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட, புகழ் உடனே நீச்சல் அடித்து கரை பகுதிக்கு செல்ல முயற்சித்தார். ஆனால், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரால் நீந்த முடியவில்லை. அதன்பிறகு, உயிருக்கு போராடிய அவர் ஒரு வழியாக கரையோரம் வந்து, அங்குள்ள மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். இரவு நேரத்தில் அங்கு யாரும் இல்லாத காரணத்தால், யாரும் உதவிக்கு வரவில்லை. தன்னம்பிக்கையை இழக்காத புகழ், உயிரை காப்பாற்றிக்கொள்ள இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்து தொங்கியபடி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். POCSO | வாடகை வீடு.. வன்மம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரர் மீது பாய்ந்தது போக்சோ
பின்னர், காலை 7 மணி அளவில் அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த அவர், மீண்டும் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். உடனே, இதை பார்த்த பொது மக்கள் அவரை மீட்க முயற்சித்தபோது, அவர்களால் இயலவில்லை. உடனே இதுகுறித்து கோயம்பேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் புகழை பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தண்ணீரிலும், பனியிலும் அதிகம் நேரம் இருந்ததால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. Watch Video: உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி... பேருந்தில் மோதி பரிதாபமாக பலி... அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
மரக்கிளையை பிடித்து 10 மணி நேரமாக தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

