மேலும் அறிய

Watch Video: உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி... பேருந்தில் மோதி பரிதாபமாக பலி... அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

உயிரை காப்பாற்ற மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர், பரிதாபமாக விபத்தில் பலியானார்.

வேடசந்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் பேருந்தில் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

Watch Video: உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி... பேருந்தில் மோதி பரிதாபமாக பலி... அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக எரியோடு அருகே உள்ள காலகவுண்டன் பட்டியை சேர்ந்த வீரகுமாரை அனுமதித்திருந்தனர்.  வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்த அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டது. உடனே அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனை செல்ல முடிவு செய்தனர். 
அவருக்கு துணையாக அவரின் உறவினர்கள்  பழனிசாமி உட்பட 2 பேர்  ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டனர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையை நோக்கி 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்த போது சத்திரபட்டி என்னுமிடத்தை நெருங்கியது. 
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, சாலை ஓரத்தில்  நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த108 ஆம்புலன்ஸ் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்புறம்  பயங்கரமாக மோதியது. இதில் 108 ஆம்புலன்ஸ்  வாகனத்தில் பயணித்த பழனிச்சாமி மற்றும் நோயாளி வீரகுமார்  இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 


Watch Video: உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி... பேருந்தில் மோதி பரிதாபமாக பலி... அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
மேலும் 108 வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவ உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணித்த 7 பேர்  படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில்,  தற்போது இந்த சம்பவம்  குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அதில் பரபரப்பான நான்கு வழிச்சாலையில் தனியார் பேருந்து வந்து நிற்பதும், அதன் பின் கண் இமைக்கும் நேரத்தில் 108 ஆம்புல்ன்ஸ் மோதி விபத்துக்கு உள்ளாவதும் பதிவாகியுள்ளது. மோதிய வேகத்தில் ஆம்புல்ன்ஸ் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கி போனதும், அதில் முன் பக்கம் இருந்தவர்கள் நசுங்கி போன அதிர்ச்சி காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. 
சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட வாகன போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" யார் முந்தி செல்வது " கல்லூரி மாணவருக்கு நடுரோட்டில் விழுந்த அரிவாள் வெட்டு
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
Embed widget