மேலும் அறிய
Advertisement
விரட்டிப் பிடித்த போலீஸ்... நாய் கொலை... சிகிச்சை சிறுமி சீண்டல்... வடக்கு மண்டல முக்கிய செய்திகள் சில!
சீட்டு ஏமாற்றிய தந்தை மகன் கைது, பாஜக கல்யாணராமன் மனு தள்ளுபடி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ.
1. சீட்டு பணம் 53.75 லட்சம் ரூபாய் ஏமாற்றிய வழக்கில், தந்தை, மகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
3. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
4. செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் பள்ளத்தெருவை சேர்ந்த இளைஞர் ஜெகன்(25) நாவல் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவல் ஏரியின் கரையோரத்தில் குளித்து கொண்டிருக்கும் போது ஜெகன் தவறிவிழுந்து இறந்துள்ளார்.
5. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட சுற்றுசூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
6. வேலூரில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து காவல்துறையில் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7. வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின், ஆர்டிஓ சாலையில் உள்ள ஒரு வங்கியில் ₹50 ஆயிரத்தை எடுத்துள்ளார். வாகனத்தில் பணத்தை வைத்த போது மர்ம நபர் அதை திருடி உள்ளார். அங்கிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஜீவிதா அவர்களை விரட்டிச் சென்று, மர்ம நபரின் கையில் இருந்த பணப்பையை இழுத்து பறித்தார். இதனால் பெண் காவலர் பாராட்டுகளைப் பெற்றார்.
8. பாஜவை சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டததாக கைது செய்யப்பட்டார் . முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீண்டும் புழல் சிறையில் மாற்றவேண்டும் என மனு அளித்து அளித்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
9. சென்னை அயோத்திகுப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் விளையாடுவது போல் நடித்து, 4வது மாடியில் இருந்து வீசி சிப்பிப்பாறை நாயை கொன்ற போதை ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
10. சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் கணைய பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிறுமியின் தாய் மருத்து வாங்க சென்றிருந்த போது அங்கு வந்த மருத்துவமனை உணவக ஊழியரும் உத்திரப்பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த இளைஞர் மோனா ராம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் காவல் துறையினர் மோனோ ராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
விழுப்புரம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion