கள்ள ஓட்டு புகார்.. சட்டையை கழட்டு...! அதிமுகவினர் ஆவேசம்! விரட்டிப்பிடித்த ஜெயக்குமார்!
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் கள்ள ஓட்டு அளிக்க வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓடி, ஓடி விரட்டிப்பிடித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. சென்னையிலும் காலை முதல் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வந்தது. அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்வதாக தகவல் பரவியது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த வார்டு பகுதிக்கு விரைந்தார். அப்போது, சிலர் அந்த வாக்குச்சாவடியில் இருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவரது தலைமையில் சென்ற வழக்கறிஞர் அணியினரும் துரத்திச் சென்றனர். அப்போது, அந்த கும்பலில் ஒரு நபரை மட்டும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர்.
மேலும் படிக்க : Urban Local Body Election Voting: மெஷினே தப்பு தப்பா இருக்கு.! வாக்கு எந்திரத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
அந்த நபரை சூழ்ந்த அ.தி.மு.க.வினரில் சிலர் அவரை தாக்கினர். அப்போது, அங்கே இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரை “சட்டையை கழட்டுடா” என்று ஆவேசமாக திட்டினார். சட்டையை கழற்றவைத்து அந்த நபரை ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் இழுத்துச்சென்றனர். பின்னர், அந்த நபரிடம் ஜெயக்குமார் உனக்கு இந்த வார்டில் என்ன சம்பந்தம்? என்று கேட்டார். நரசிங்கன் தெரு 51வது வார்டில் வரும். நீ எதற்கு இங்கே வந்தாய்? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அந்த நபர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றும், அவர் கள்ளஓட்டு அளிக்க வந்த நபர் என்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த இந்த தேர்தல் பல இடங்களில் அமைதியாகவே நடைபெற்று முடிந்தது. சில இடங்களில் மட்டும் சில சலசலப்புகள் ஏற்பட்டது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்று, வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க : TN Urban Local Body Election 2022 Voting: முடிந்தது நேரம்.. டல்லடித்த தலைநகர்.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
மேலும் படிக்க : TN Urban Local Body Election 2022: கள்ள ஓட்டு குழப்பம்.. கடைசி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த எல்.முருகன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்