மேலும் அறிய

மழை காலங்களில் இதையெல்லாம் செய்யாதீங்க - மின்சார வாரியம் கொடுத்த எச்சரிக்கை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல்:

வங்கக் கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டு இருந்தது. முன்பு இது புயலாக மாறாது என வானிலை மையம் நேற்று கூறியிருந்தது. ஆனால், இன்று காலை, அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது. இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது என அறிவித்தது. 

இந்நிலையில் சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

1. ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

2. வீட்டில் மின் சுவிட்சுகைள 'ஆன்' செய்யும்போது கவனத்துடன் இயக்கவும்.

3. வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

4. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

5. நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

6. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது.

7. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.

8. மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர்பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

9. சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவேதா மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

10. மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.

11. மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். கம்பங்களிலோ மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget