மேலும் அறிய

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்னை விட கெழடு - கோவப்பட்ட எச்.ராஜா

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நிகழ்வு ஒன்றில் , ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்னை விட வயதான கெழடு என எச்.ராஜா விமர்சனம்

ஹெல்மட் வழங்கும் நிகழ்ச்சி 

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைக்கவசம் உயிருக்கு பாதுகாப்பு நரேந்திர மோடி நாட்டுக்கு பாதுகாப்பு எனும் தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு எச். ராஜா செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி 

கடந்த 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை சேவா பார்ட்னைட் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள் வரை மக்கள் சேவை பணிகளில் பாரதிய ஜனதா கட்சி தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

பாஜக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து இளைஞர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இது பாராட்டுக்கு உரியது.

இரண்டு தினங்களுக்கு முன்பாக கோவையில் மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து வந்துள்ளேன் , இந்த நிகழ்ச்சி எத்தனை நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கியது என்று இல்லாமல் ஹெல்மெட் அணிய வேண்டிய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்

இரண்டு நாட்களாக மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு செய்தி வெளி வருகிறது , திருப்பதியில் மக்களுக்கான பிரசாதத்தில் லட்டு தயாரிப்பதில்  மிருக கொழுப்பு கொண்டு செய்திருக்கிறார்கள் என்ற செய்தி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்.

சாமுவேல் ராஜசேகர் ரெட்டி இருக்கும் பொழுது ஏழுமலையான் பெயர் கொண்ட வெங்கடாசலபதியை அவருக்கு இரண்டு மலை தான் மீதம் ஐந்து மலை இல்லை என்று கூறினார் அதே மலையில் தான் அவர் அடிபட்டு காலமானார்.

அதனைத் தொடர்ந்து அவரது மகனின் கிறிஸ்துவ மதவெறி ஆட்சியில் உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் போற்றுகின்ற திருப்பதி என்று கூறினால் அதற்கு பிரசித்தி பெற்றது லட்டு அதில் மாட்டு கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பை கலந்து விர்ப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

நாம் இதை பேசினால் அதை மதவாதம் என்று கூறுவார்கள்

இந்து மத நம்பிக்கை இல்லாத எவரும் கோவில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் ஆட்சிப் பொறுப்பிலும் இருக்க கூடாது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த மோசமான சம்பவம் எடுத்து காட்டுகிறது.

இதற்கு காரணமாக இருந்தவர்கள் கடுமையாக தண்டிக்க பட வேண்டும். ஹிந்து மத நம்பிக்கை இல்லாதவர்களை நாம் ஆட்சிப் பொறுப்பிலோ கோவில் நிர்வாகிகளோ வரவிடக்கூடாது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

செல்வப்பெருந்தகை என்கிற கே.செல்வம் நீக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக ஒருவர் இருக்கிறார் அவருடைய பெயர் கே செல்வம் , ஆனால் அவர் பெரும் தொகை இன்றையதால் அவர் செல்வப் பெருந்தகை ஆனார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் அவருடைய பெயர் கே செல்வம் என்று தான் பதிவிடப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த ஜெய்சங்கர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு  நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் செல்வப் பெருந்தைக்கு சம்பந்தம் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

செல்வ பெருந்தகை என்கின்ற கே செல்வம் குற்ற பின்னணி உள்ளவர் என்பதை இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்துகிறது. ஆகவே இவரை காங்கிரஸ்  கட்சி மாநில பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்

இந்த வழக்கு விசாரிக்க பட வேண்டும் , காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும் 

இதன் காரணமாக தான் செல்வப் பெருந்தகை அவர்களை நான் அஞ்சு லட்சம் அம்மாவாசை என குறிப்பிட்டு இருந்தேன் , செல்வ பெருந்தகை பல்வேறு கட்சியில் இருந்து தாவி தற்போது கடைசியாக 5 ஆம் கட்சியாக  காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பற்றியும் என்னை பற்றியும் பலமுறை பேசி உள்ளார் இதன் மூலமே இவர் குற்றப் பின்னணி உள்ளவர் என்று தெரிய வருகிறது.

ஜெய்சங்கர் அவர் கடிதத்தின் மீது மாநில அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலைஞர் காங்கிரஸின் நிர்வாகியாகவும் இவருடைய தனிப்பட்ட உதவியாளராகவும் இருக்கும் அஸ்வத்தாமன்  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார், இதனால் செல்வப் பெருந்தகை அவர்களை முறையாக காவல்துறை விசாரிக்க வேண்டும்.

ராகுல் குறித்தான கேள்விக்கு தேசிய ஊடகங்களில் ராகுல் காந்தி ஆண்டி இந்தியன் என்று விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர்த்து சர்வதேச அளவிலும் ராகுல் காந்தியின் வருகிறது இந்திய வினோத நடவடிக்கைகள் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. 

சோமாலியா நாட்டை சேர்ந்த அமெரிக்கா சென்டர் ஹிலா  உமர் அமெரிக்க தூதரகத்தில் இந்திய நாட்டை தொடர்பாக தவறாக பேசியுள்ளார் இவருக்கும் ராகுல் காந்திக்கும் என்ன விதமான வேலை உள்ளது ? 

முத்ரா திட்டம் குறித்து நேற்றைய தினம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஏற்றப்பட்ட தீர்மானத்துக்குரிய கேள்விக்கு 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்னை விட வயதான கெழடு

இ.வி.கே.எஸ்  இளங்கோவன் என்னைவிட வயதில் அதிகமானவன் என்று நினைத்திட வேண்டாம் , என்னைவிட 15 வயது அதிகமான கெழடு நடக்க முடியாத நிலையில் மகன் இறந்ததால் காலாவதி ஆனவர் , சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார், அதனால் காங்கிரஸ் கட்சியினர் பேச்சு இந்த பாரத தேசத்திற்கு எதிராக உள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தல்

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து 1970 வரை அனைத்து தேர்தல்களும் இந்த நாடு முழுவதும் அனைத்து தேர்தல்கலும் ஒரே நேரத்தில் நடந்தது தான் ஆனால் திருமதி காந்தி அவர்கள் மாநில அரசுகளை இஷ்டம் போல் டிஸ்மிஸ் பண்ணியதால் தேர்தல் வெவ்வேறு காலங்களில்  நடைபெற்று வருகிறது , ஒரு அரசியல் கட்சியும் அரசியல் நிர்வாகமும் தேர்தல் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமும்  குறித்தும் மக்கள் மேம்பாடு குறித்தும் கவனம் செலுத்த முடியாது எனவே எதிர்க்கட்சிகளின் வாதம் அடிப்படை இல்லாதது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget