இனி வரும் காலங்களில் திமுக அரசு மக்களுக்கு சரியாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சரியாக பாதுகாத்து வைக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது ;
தமிழ்நாட்டை காஞ்சிபுரத்தில் தயாரித்த இருமல் மருந்தை பயன்படுத்தியதால் மத்திய பிரதேசத்தில் சுமார் 25 குழந்தைகள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவைக்கு கொண்டு வந்தேன். ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருமல் மருந்தால் பச்சிளம் குழந்தைகள் இறந்து விட்டார்கள். தற்போது இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 25 ஆகும். உலக சுகாதார மையம் அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நேர்ந்த குழந்தைகளின் மரணம் வேதனை அளிக்கக் கூடியது.
இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது சிறை தண்டனையும் வழங்கி இருக்கிறது. 30.8.2025 சோதனை நடைபெற்றபோது மறைந்த நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு உற்பத்தியை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிறுவனம் இதற்கு முன்னால் பலமுறை தவறு செய்திருக்கிறது. அரசின் அலட்சியத்தின் காரணமாக பச்சிளம் குழத்தைகள் இறந்திருக்கிறார்கள். 2024 ஆண்டு இந்த மருந்து நிறுவனத்தில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. 2025 ஆம் ஆண்டும் எந்த சோதனையும் நடைபெறவில்லை. இந்த நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. திமுக அரசு அலட்சியத்தால் தான் இந்த உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
கிட்னி முறைகேடு கண்டுபிடிப்பு
கிட்னி முறைகேட்டில் திமுக அரசு ஈடுபட்டு இருக்கிறது. நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. எந்த மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்களோ அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏழைத் தொழிலாளர்களுக்கு பணத்தாசைசை காட்டி அழைத்துச் சென்று கிட்னி திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற மதுரை கிளை சிறப்பு விசாரணை குழு அமைத்து இருக்கிறார்கள். இரண்டு மருத்துவமனைகள் சோதனைகள் செய்யப்பட்டு அங்கு கிட்னியில் முறையிட்டு ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தனி நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் திமுக அரசு நாட்டு மக்களுக்கு சரியாக செயல்பட வேண்டும்.
எத்தனை நாள் நெல்லை பாதுகாத்து வைக்க முடியும்
விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திமுக அரசு சரியாக கொள்முதல் செய்யவில்லை. டெல்டா மாவட்டத்தில் 30 லட்சம் நெல் மூட்டைகள் சாலைகளில் குவிக்க வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களாக சாலையில் கொட்டி விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட அந்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் எத்தனை நாளைக்கு இந்த நெல்லை பாதுகாத்து வைக்க முடியும்.
விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சரியாக பாதுகாக்கவில்லை. விவசாயி நிலை சரியாக விட்டால் தான் அவருடைய ஒரு ஆண்டு வாழ்க்கையை வாழ முடியும். திமுக அரசியல் மெத்தனப் போக்கில் இருக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சரியாக பாதுகாத்து வைக்கப்படும். இன்றைக்கு 30 லட்சம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவித்து வைத்திருக்கிறார்கள். விவசாயிகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். 2014 இல் இருந்து 2021 வரை மத்திய அரசினுடைய நிதி பகிர்வு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து கோடி.
இன்றைக்கு 73 ஆண்டு காலம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது தமிழகத்திற்கு. அதிமுக வாங்கிய கடனுக்கு தான் நாங்கள் இப்போ வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் சொல்கிறார். அதிமுக வாங்கிய கடனுக்கு மட்டும் நீங்கள் வட்டி கட்டவில்லை திமுக வாங்கிய கடனுக்கும் தான் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நான்கரை ஆண்டு காலத்தில் 4.5 லட்சம் கோடி திமுக அரசு கடன் வாங்கி இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிதி மேலாண்மை சரி செய்யப்படும். திமுக அரசாங்கம் ஓய்வூதியத்தை கூட சரியாக கொடுக்க முடியாத அரசாங்கம் ஆகும். திமுக அரசு பொறுப்பு ஏற்று பிறகு எத்தனை நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது எத்தனை தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது என்று வெள்ளைத் தாளை மட்டும் தான் எடுத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்ட உடனே பல லட்சம் மக்களுக்கு வேலை கிடைத்த மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார். திமுக அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பார்கள் அதன் பிறகு அது அப்படியே விட்டு விடுவார்கள்.
இந்த திமுக அரசாங்கத்திற்கு ஒரு உருட்டுக்கடை அல்வா கொடுக்கிறேன். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 535 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எல்லோருக்கும் உருட்டுக்கடை அல்வா கொடுத்து விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் , உருட்டுக்கடை அல்வா - என்னும் வாசகம் பொருந்திய பாக்கெட்டை எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் எடுத்து காட்டினார்.





















