Cyclone Mandous: அடுத்த 3 மணி நேரம்..! 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! உங்கள் மாவட்டத்திலுமா..? முழு விவரம்..
திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர் கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திராவை கடந்தது.
இது மாமல்லபுரம் (மகாபலிபுரம்) க்கு அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புயலாக அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி கரையை கடந்தது.
இது கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகல் காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாற வாய்ப்புள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்துள்ளது என்றும், நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது எனத் தெரிவித்தார். இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அதன் பின்னர் மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என்றார். புயல் காரணமாக சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. குறிப்பாக காட்டுப்பாக்கம் 16 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப்பொழிவு பெய்துள்ளது என்று கூறினார். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசி உள்ளது என்றார். மேலும் வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.