மேலும் அறிய

சென்னை மெட்ரோவுக்கு கிடைத்த புது அங்கீகாரம்.. ஆண், பெண் என அனைவருக்கும் சம வாய்ப்பு

பாலின சமத்துவ விருதை முதல் முறையாக பெற்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமை அளிக்கும் சிறப்பான தருணமாகும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

2 விருதுகளை வாங்கி குவித்த CMRL: 

டெல்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநாடு 2025-இல் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, கிரீன்டெக் அறக்கட்டளையால் இரண்டு மதிப்புமிக்க உலகளாவிய விருதுகள் (சுற்றுச் சூழல்பாதுகாப்பிற்காக – சுற்றுச்சூழல் விருது மற்றும் பாலின சமத்துவத்திற்காக - நிலைத்தன்மை விருது) வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா இந்த விருதினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் இ.ஆ.ப., காண்பித்து வாழ்த்துப்பெற்றார்.

இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, உதவி பொது மேலாளர் (வடிவமைப்பு) எஸ். ராஜலட்சுமி, மேலாளர் (சுற்றுச்சூழல்) ஆர். சரவணகுமார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆண், பெண் என அனைவருக்கும் சம வாய்ப்பு:

இந்த விருது, பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்பான நிகரற்ற சேவைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பாலினங்களுக்கும் வேலைவாய்ப்பு, பயிற்சி, தலைமைப் பொறுப்புகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றில் சம வாய்ப்புகளை அளிப்பதோடு மட்டும்மல்லாமல் அதனை உறுதி செய்யும் வகையில் பணியிடக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

பாலின சமத்துவ விருதை முதல் முறையாக பெற்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமை அளிக்கும் சிறப்பான தருணமாகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதலாக, இயற்கை வளங்களின் மேலாண்மையை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதியான செயல்களை நிரூபித்துள்ளது.

சென்னை மெட்ரோவுக்கு கிடைத்த புது அங்கீகாரம்:

இந்த முயற்சிகள் மூலம் நிலையான மற்றும் அனைவருக்கும் ஒருங்கிணைந்த நகர போக்குவரத்து முறையை உருவாக்கும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முழுமையான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முக்கிய சாதனைகளாக மின் சக்தி பயன்படுத்தும் திறனை மேம்படுத்தல், தண்ணீர் மேலாண்மை முறைகளை பலப்படுத்தல் மற்றும் கார்பன் உமிழ்வை குறைத்தல் ஆகியவை அடங்கும்.

இவை அனைத்தும் திட்டத்தின் கட்டுமான மற்றும் இயக்க காலங்களில் செயல்பாட்டு செயல்திறனை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் செயல்பாட்டு செலவுகளை குறைக்கும் வகையிலும் பணியாற்றுகின்றன. இந்த முயற்சிகள் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாலின சமத்துவம் மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமைத்துள்ளது.

இது, சென்னை மெட்ரோ பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, நம்பகமான, வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு போக்குவரத்து அனுபவத்தை உறுதி செய்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கிடைத்த இந்த அங்கீகாரம், தனது செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களின் அனைத்து நிலைகளிலும் சுற்றுச்சூழல் சிந்தனையை ஒருங்கிணைத்து செயல்படும் சிறந்த தலைமைத்துவத்தையும் சிறப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget