மேலும் அறிய

Chennai: தலைக்கேறிய போதை... நடுரோட்டில் அட்டகாசம்... சென்னையில் அட்டூழியம் செய்த இளம்பெண்கள்..!

சென்னையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Chennai : சென்னை திருவல்லிக்கேணியில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். மெரினா கடற்கரைக்கு செல்லும் காமராஜர் சாலையை இணைக்கும் இந்த வாலாஜா சாலை இரவு நேரங்களில் கூட  போக்குவரத்து நெரிசல் இருக்கும். வார இறுதி நாட்கள் என்பதால் நேற்று கூடுதலாக போக்குவரத்து நெரிசல் இருந்தது.  அங்கு சாலையோர கடைகளும் நள்ளிரவு 11 மணிவரை இருக்கும் இந்த நிலையில், நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ரகளையில் ஈடுபட்ட பெண்கள்

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு மதுபோதையில்  இருந்த பெண்கள் 3 பேர் திடீரென ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சாலையில் நடந்த சென்றவர்களிடம் வம்பிற்கு செல்வது போல் பெண்கள் ரகளை செய்துள்ளனர்.  முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அங்கிருக்கும் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

வழக்குப்பதிவு

அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் போலீசார் பேசிக் கொண்டு இருந்தனர். போலீசார் சொல்வதை கேட்காமல் ரகளையில் ஈடுபட்டனர்.  இதனை அடுத்து, பெண்கள் 3 பேரும் கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் மதுபோதையில் இதுபோன்று ரகளையில் ஈடுபட்டதும், அப்பகுதில் திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ரகளையில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர், மூன்று பெண்களையும் கண்ணகி நகரில் உள்ள அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர்கள் வீடியோ எடுத்து, இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

தற்கொலை முயற்சி

இந்நிலையில், ரகளையில் ஈடுபட்ட 3 பேரில் சோனாலி என்ற பெண் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு, கால்கள் முறிந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் சோனாலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனாலி உள்பட 3 பெண்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Embed widget