Chennai Powercut: சென்னையில் நாளை, நாளை மறுநாளில் இந்த இடங்களில் பவர்கட்.. லிஸ்ட் இதோ..
Chennai Power cut : சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் நாளை (அக்.27) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். அந்த வகையில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும்.
நாளைய மின் தடை
அரும்பாக்கம்
அரும்பாக்கம் மார்க்கெட் சேமத்தம்மன் நகர், மேட்டுக்குளம், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர் புவனேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
திருவெள்ளவோயல்
திருவெள்ளவயல், காட்டூர், கல்பாக்கம், வோயலூர், மேரட்டூர், நெய்த்வயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊர்ணம்பேடு, ராமநாதபுரம்.
நாளை மறுநாள் மின் தடை
இதேபோல் நாளை மறுநாள் (அக்.28) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,
தாம்பரம்
ஜல்லடையன்பேட்டை பெரும்பாக்கம் கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு பள்ளிக்கரணை தர்மலிங்க நகர், விவேகனந்தா நகர், மீனட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
அரும்பாக்கம்
மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகர் எம்.எம்.டி.ஏ காலனி “எ” முதல் “ஆர்” பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர் சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துலா தெரு கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4 வது தெரு அழகிரி நகர் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விருதுநகரில் மின் தடை
அதேபோல், விருதுநகர் மாவட்ட,ம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (அக்.27) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெற உள்ளதால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
நிறுத்தப்படுவதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.