சென்னையில் கார் ஆம்புலன்ஸ்க்கு வரவேற்பு - ககன்தீப் செய்த அதிரடி
புதிய திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துள்ளதால் கார் ஆம்புலன்ஸ்களில்ன் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தேவையான மற்ற நகரங்களுக்கும் இந்த சேவையை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய கார் ஆம்புலன்ஸ் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு விரைவாக மருத்துவமனை செல்லவும் உதவுவதாக சென்னை மக்கள் கூறி வருகின்றனர். கார் ஆம்புலன்ஸ் சேவைக்கு பிறகு எப்போதும் பயன்படுத்தும் ஆம்புலன்ஸ்களுக்கானதேவை சற்று குறைய ஆரம்பித்துள்ளது.
அறிமுகப்பட்டுத்தப்பட்டு இரண்டு நாள்களில் 225 கார் ஆம்புலன்ஸ்களில் 607 பேர் தடுப்பு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டனர். அதே நேரத்தில் அந்த என்ணிக்கை ஒவ்வொரு நாளு, 100 முதல் 200 வரை அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது “சாதாரணமாக ஒருநாளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் 3 பேர் வரை மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள், அதனை 6 பேர் வரை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம், உரிய பாதுகாப்பு முறைகளோடு ஆம்புலன்ஸ் பராமரிக்கப்படுவதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்” என்றனர்.
முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு ககன் தீப் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பலரும் மருத்துவமனை வர சிக்கல் நீடிப்பதாக அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து உடனடியாக மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ககன் தீப் ஆலோசனை செய்தார்.
அதனையடுத்து சென்னையில் கார் ஆம்புலன்ஸ்களை அறிமுகம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. கார்களில் ஓட்டுநருக்கும் பின்னால் அமர்பவர்களுக்கும் இடையே பிளாஸ்டிக் தடுப்பு உருவாக்கப்பட்டு பிரிக்கப்படும். அழைப்பு வந்தவுடன் கார் முழுக்க கிருமி நாசினி கொண்டு சுத்தமாக்கப்பட்டு அழைத்து வர அனுப்பப்படும்.
புதிய திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துள்ளதால் கார் ஆம்புலன்ஸ்களில்ன் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தேவையான மற்ற நகரங்களுக்கும் இந்த சேவையை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.